இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி!

பழைய 5 ரூபாய்

ஆன்லைன் மூலமாகவே விற்பனை செய்து ஆன்லைன் மூலமாகவே வங்கிக் கணக்கில் பணம் ஈட்டலாம்.

  • Share this:
பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள விற்பனை செய்வதன் மூலம் இந்த பெருந்தொற்று காலத்தில் ஈஸியாக வருமானம் பார்க்கலாம், இதற்காக அங்கும், இங்கும், எங்குமே அலையத்தேவையில்லை வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். உங்களிடம் இந்த பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி ஆகும் வாய்ப்பை பெறுவீர்கள்.

பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கலாம். இன்னும் சிலரின் வீட்டில் பழைய நாணயங்கள், பணத்தை ஒரு ஞாபகார்த்தத்திற்காக கூட பீரோக்களில் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது.

எது எப்படியோ பழைய நாணயம், ரூபாய் நோட்டு சேகரிப்பு உங்களுக்கு சில ஆயிரங்களையோ, சில லட்சங்களையோ வருமானம் ஈட்டித் தரக்கூடிய வாய்ப்பை தருகிறது. வீட்டில் வேலை இல்லாமல் முடங்கிக் கிடப்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைகிறது.

அது எப்படி வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், வம்பிழுக்கிறீர்களா என கேட்க வேண்டாம். பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டு வியாபாரம் என்பது நம்பகமான ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. அதிலும் இதற்காக நாம் எங்குமே செல்லத்தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே விற்பனை செய்து ஆன்லைன் மூலமாகவே வங்கிக் கணக்கில் பணம் ஈட்டலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில அரிதான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களுக்கு இது போன்ற வியாபாரத்தில் பெரும் பணம் கிடைக்கும். இதற்கென பிரத்யேக வலைத்தளங்கள் உள்ளன. அங்கு தான் இந்த வர்த்தகம் சுடச் சுட அரங்கேறிக்கொண்டிருக்கிறது/

காயின்பஜார்.காம் என்ற வலைத்தளம் இப்படியொரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த தளத்தில் தற்போது அரிதான பழைய 5 ரூபாய் தாள் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 5 ரூபாய் நோட்டில் இருக்கும் சீரியல் எண் 786 என இருமுறை தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ரூபாய் தாளிலும் இருக்கும் அந்த எண் 786 786 என்பதாக இருந்தால் அதற்கு ஈடாக ஆயிரக்கணக்கான ரூபாய் விலை தருவதாக கூறப்பட்டுள்ளது.

Also Read:   அலுவலகம் வரச்சொன்னால் வேலையே வேண்டாம் என கூறும் ஊழியர்கள் - அதிரவைக்கும் WFH ஆய்வு முடிவுகள்!

இந்த அரிய ரூபாய் நோட்டு கிடைத்தால் அதை காயின் பஜார் வலைத்தளத்திலேயே விற்பனை செய்துவிடலாம். முதலில் நீங்கள் காயின்பஜார்.காம் தளத்திற்கு சென்று அங்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். விற்பனையாளராக பதிவு செய்து கொண்டு உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டின் படத்தை அங்கு பதிவிட வேண்டும்.

Also Read:  உயிர் வாழ முடியாத கிரகமாக வீனஸ் மாறியது ஏன்?

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் இது போன்ற இக்கட்டான நேரத்தில் இது போன்ற ஒரு சிறிய விற்பனையின் மூலம் நீங்கள் லட்சாதிபதியாகும் வாய்ப்பை கூட பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published: