இந்த வங்கி அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் மாதந்தோறும் வட்டியை வழங்கிவிடுமாம்!

மாதிரிப் படம்

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு பராமரிக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச இருப்பில் எந்த மாற்றங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி அதன் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் மாதாந்திர வட்டி வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 1 ஆம் தேதி முதல் சேமிப்பு கணக்கிற்கான வட்டி, மாத அடிப்படையில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளின்படி, வங்கிகள் காலாண்டு அடிப்படையில் வைப்புத்தொகையாளர்களின் கணக்குகளுக்கு வட்டி செலுத்துகின்றன. இந்நிலையில், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மாதாந்திர அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது.

  நிலையான வைப்புத்தொகையைப் பொறுத்தவரை, வங்கிகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையிலும், சேமிப்புக் கணக்குகளுக்கு ஒட்டுமொத்தமாகவும் வட்டியை வழங்குகிறார்கள். ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி அதன் அனைத்து சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் மாதாந்திர வட்டி வசதியை செயல்படுத்த வுள்ளது. அதன்படி, அனைத்து சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் மாதாந்திர வட்டி வசதி வழங்கப்படும். சேமிப்பு கணக்குகளுக்கு சராசரியாக 3% வட்டி விகிதத்தைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு ஐடிஎப்சி வங்கி காலாண்டு வட்டிக்கு மேல் 0.0074% கூடுதலாக வட்டி கிடைக்கும் என கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், சேவைகள் மற்றும் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த வசதி கிடைக்கப்பெறுகிறது, இதனால் அவர்கள் சேமிப்புக் கணக்குகளில் வட்டித் தொகையைப் பெற மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியது இல்லை என வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம், சேமிப்புக் கணக்கு தொடர்பான அனைத்து சேவைகளும் சலுகைகளும் அப்படியே தொடரும்.

  IDFC First Bank


  சேமிப்புக் கணக்குகளுக்கு பராமரிக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச இருப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. குறைந்தபட்சம் 10 ஆயிரும் ரூபாய் இருப்பு உள்ள கணக்குகளுக்கும், குறைந்தபட்சம் 25 ஆயிரும் ரூபாயாக இருக்கும் கணக்குகளுக்கும் இது பொருந்தும். சேமிப்புக் கணக்கில் சம்பாதித்த வட்டிக்கு டிடிஎஸ் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சேமிப்புக் கணக்கில் நிலுவைகளைப் பொறுத்து ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி வருடத்திற்கு 3-5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. கணக்கில் நிலுவை ரூ .10 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அது ஆண்டுக்கு 4% வட்டியைப் பெறும். நிலுவைத் தொகை ரூ .10 லட்சத்துக்கு மேல் 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், வங்கி ஆண்டுக்கு 5% வட்டி செலுத்தும். நிலுவைத் தொகை ரூ .100 கோடிக்கு மேல் இருந்தால், அது ஆண்டுக்கு 3% வீதத்தில் வட்டி பெறும்.

  Must Read : 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கு ஓர் ஆலோசனை!

  இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிகள் ஒரு நாள் முடிவில் நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டியைக் கணக்கிட வேண்டும். மார்ச் 2016ல், ரிசர்வ் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை காலாண்டு அடிப்படையில் வரவு வைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது, இதற்கு முன்னர் இது அரை ஆண்டு அடிப்படையில் வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 3 மாதங்கள் அல்லது ஆண்டின் இறுதிவரை காத்திருப்பதை விட, வட்டி தொகையை மாதந்தோறும் வரவு வைப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
  Published by:Suresh V
  First published: