Home /News /business /

ICICI பேங்கின் அறிவிப்பால் ஷாக்கில் வாடிக்கையாளர்கள்.. இனி ரூ.1200 வரை கூடுதல் கட்டணம்!

ICICI பேங்கின் அறிவிப்பால் ஷாக்கில் வாடிக்கையாளர்கள்.. இனி ரூ.1200 வரை கூடுதல் கட்டணம்!

ஐசிஐசிஐ பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

ICICI update: மிக அதிகபட்சமாக ரூ.50,000 க்கான டியூ தொகைக்கான தாமத கட்டணமாக ரூ.1,200 வசூலிக்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு கட்டணத்தை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது. இந்த புதிய விதி ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. செக் ரிட்டர்ன் ஆனது என்றாலும், மொத்த டியூ தொகையில் 2 சதவீதத்துடன் குறைந்தபட்சம் ரூ.500 என்ற தொகையை இந்த வங்கி வசூலித்து வருகிறது.

    தாமதமாக செலுத்தப்படும் கட்டணங்களுக்கான அபராதம் என்பது மொத்த டியூ தொகைக்கு ஏற்ப வேறுபடுகிறது. ஒருவேளை உங்களுக்கான மொத்த டியூ ரூ.100 க்கு குறைவாக இருந்தால், உங்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. அதுவே, இதற்கு அதிகமான டியூ தொகை என்றால், தொகை ஏற்ப கட்டணமும் அதிகரிக்கும்.

    இதையும் படிங்க..கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை PPF திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா? முழு விவரம்!

    மிக அதிகபட்சமாக ரூ.50,000 க்கான டியூ தொகைக்கான தாமத கட்டணமாக ரூ.1,200 வசூலிக்கப்படுகிறது என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வு குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதம் தெரியப்படுத்தியது. இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்தியில், “அன்பார்ந்த வாடிக்கையாளரே, 10 - பிப்ரவரி - 2022 முதல் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சேவைகள் மீதான கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் பல தகவல்களுக்கு வங்கியின் இணையதளத்தை பார்வையிட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஐசிஐசிஐ வங்கி மாற்றப்பட்ட கட்டண விவரம்

    டியூ தொகை ரூ.100 க்கு குறைவாக - எந்தவித கட்டணமும் கிடையாது.
    டியூ தொகை ரூ.100 - ரூ.500 வரை - ரூ.100 தாமத கட்டணம்.
    டியூ தொகை ரூ.501 - ரூ.5,000 வரை - ரூ.500 தாமத கட்டணம்.
    டியூ தொகை ரூ.5,001 - ரூ.10,00 வரை - ரூ.750 தாமத கட்டணம்.
    டியூ தொகை ரூ.10,001 - ரூ.25,000 வரை - ரூ.900 தாமத கட்டணம்.
    டியூ தொகை ரூ.25,011 - ரூ.50,000 வரை - ரூ.1,000 தாமத கட்டணம்.
    டியூ தொகை ரூ.50,000 வரை - ரூ.1,200 தாமத கட்டணம்.

    இதையும் படிங்க.. SBI முக்கிய எச்சரிக்கை : இதை செய்யவில்லை என்றால் சேவைகள் நிறுத்தப்படுமாம்!

    இந்தத் தாமத கட்டணத்தோடு, வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கில் இருந்து பிளாட் சார்ஜ் ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதேசமயம், ஐசிஐசிஐ வங்கியின் எமரேல்ட் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, டியூ தேதிக்குள் உங்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால், அதை கிளியர் செய்யும் வரை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி இல்லாமல் தொடர்ந்து கடன் பெற்றால், தாமதக் கட்டணம் மற்றும் வட்டி ஆகியவை சேர்ந்து உங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, ICICI Bank

    அடுத்த செய்தி