Home /News /business /

மருத்துவர்களுக்கான ப்ரொஃபெஷனல் இன்டெம்னிட்டி இன்சூரன்ஸை அறிமுகம் செய்த ICICI Lombard!

மருத்துவர்களுக்கான ப்ரொஃபெஷனல் இன்டெம்னிட்டி இன்சூரன்ஸை அறிமுகம் செய்த ICICI Lombard!

icici lombard

icici lombard

ICICI Lombard | இந்த தொழில்முறை இழப்பீட்டுக் காப்பீடு ஆனது மருத்துவர்களை சட்டரீதியாகவும் நிதி ரீதியாகவும் ஆதரிக்கும்.

தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லோம்பார்ட் (ICICI Lombard), மருத்துவர்களுக்கான தொழில்முறை இழப்பீட்டுக் காப்பீட்டை (Professional indemnity insurance) அறிமுகம் செய்துள்ளது. இது அனைத்து நிபுணத்துவங்களையும் உள்ளடக்கியது மற்றும் இன்ஸ்டன்ட் பாலிசி இன்சூரன்ஸை (Instant policy issuance) வழங்குகிறது. இது வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை மிக்க விலை, தொந்தரவில்லாத க்ளெயிம் ப்ராசஸ் (claim process) மற்றும் உரிமைகோரல்களின் போது சட்ட ஆலோசனை சேவைகள் (legal counsel services) ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

ஐசிஐசிஐ லோம்பார்ட், மருத்துவர்களுக்கான இந்த இழப்பீட்டுக் காப்பீட்டை பற்றி ஒரு அறிக்கையில், "மருத்துவர்களும் மனித தவறுகளால் பாதிக்கப்படுகின்றனர், இத்தகைய சூழ்நிலைகளுக்கு ஒரு தீர்வாக, நோயாளிகளுக்கு தொழில்முறை சேவைகளை வழங்கும்போது ஏற்படும் பல்வேறு மனித தவறுகளுக்கு எதிராக மருத்துவ பயிற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தின் கீழ் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொழில்முறை இழப்பீட்டுக் காப்பீடு ஆனது மருத்துவர்களை சட்டரீதியாகவும் நிதி ரீதியாகவும் ஆதரிக்கும். விசாரணையின் போது ஏற்படும் 'டிஃபென்ஸ்' செலவுகள், ரெப்ரெசன்டேஷன் செலவுகள் மற்றும் தவறு மற்றும் அலட்சியம் காரணமாக ஏற்படும் உடல் காயம் அல்லது இறப்பு ஆகியவற்றால் எழும் க்ளெயிம்களுக்கான இழப்பீடு போன்ற சட்டப் பொறுப்புகளுக்கு எதிரான கவரேஜ், இந்த காப்பீட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த காப்பீடு நிறுவனத்தின் பாரம்பரியமான விநியோகஸ்தர்கள் மற்றும் அதன் வலைத்தளமான www.sme.icicilombard.com வழியாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து ஐசிஐசிஐ லோம்பார்டின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் மந்திரி கூறுகையில், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் உயிரைக் காப்பாற்றும் பணியின் முன்களத்தில் இருக்கும் போது நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அபாயங்களுக்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் ஏற்படும் தற்செயலான அலட்சியம் அவர்களின் ப்ரொஃபெஷனல் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், எங்கள் நிபுணத்துவம் மிக்க இழப்பீட்டுக் காப்பீடு, அனைத்து வகையான தொழில்முறை அபாயங்களிலிருந்தும் மருத்துவர்களைப் பாதுகாக்கிறது. ஒரு நிறுவனமாக, மருத்துவர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு சிறந்த நிதி மற்றும் சட்டப் பாதுகாப்பை வழங்கவும் நாங்கள் முனைகிறோம். ஏனெனில் அவர்கள் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்கள்" என்று கூறி உள்ளார்.

Also Read : என்னது! இந்தியர்கள் அந்த விஷயத்திற்காக தான் அதிக இன்சூரன்ஸ் எடுக்கிறார்களா?

ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், மோட்டார், ஹெல்த், கார்ப், ஃபையர், பெர்சனல் ஆக்சிடென்ட், மெரைன், என்ஜினீயரிங் மற்றும் லையபிலிட்டி இன்சூரன்ஸ் உள்ளிட்ட விரிவான மற்றும் நன்கு பல்வகைப்பட்ட தயாரிப்புகளை பல விநியோக வழிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உயிர்களை காப்பாற்றும் விஷயத்தில் மருத்துவர்கள் தங்களால் முடிந்ததை செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள். இருப்பினும், அவர்களின் வேலை அவர்களை ஆபத்தில் வைக்கக்கூடிய நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கி விடுகிறது. எனவே தான் எஸ்எம்இ (SME) பிரிவின் கீழ் உள்ள மருத்துவர்களுக்கான தொழில்முறை இழப்பீட்டுக் காப்பீடு, இந்த முன்னணி பொதுக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வரும் ஒரு புதுமையான சலுகையாக பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Doctors, ICICI Lombard, Insurance

அடுத்த செய்தி