ICICI Lombard நலக் காப்பீட்டுத் தீர்வுகளுடன் #RestartRight - நீங்கள் நம்பக்கூடிய காப்பீடு.

நாளை என்பது நம்பிக்கையால் நிரம்பியிருக்கலாம் அல்லது அச்சத்தால் நிரம்பியிருக்கலாம் என்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. போதுமான அளவு நலக் காப்பீட்டைப் பெற்றுக்கொண்டால், உங்களுடைய மன நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றம் வரலாம்.

ICICI Lombard நலக் காப்பீட்டுத் தீர்வுகளுடன் #RestartRight - நீங்கள் நம்பக்கூடிய காப்பீடு.
ICICI
  • Share this:
COVID-19 நோய்ப்பரவல் தொடர்ந்து மக்களிடையே மிகுந்துவருகிற இந்நிலையில், நலச் சவால்களின் அளவும் எண்ணிக்கையும் கூடுமே தவிர குறையப்போவதில்லை. இப்போது, நாம் வைரஸைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதாது, வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக நமக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்றும் கவலைப்படவேண்டும். ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது: பழைய விதிமுறைகள் அனைத்தும் இப்போது வெளியேறிவிட்டன.

நாம் #RestartRight செய்வதற்கான வழிகள் என்ன என்று பார்த்தால், ‘புதிய இயல்பு'க்கு நம்மைத் தயார் செய்துகொள்ளுதல், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் மற்றும் நமக்கு மிகவும் தேவைப்படுகிற வழிகளில் நம்மைக் காக்கும் நலக் காப்பீட்டுத் தீர்வுகளைப் பெறுதல் ஆகியவைதான். நானோ இள வயதில் இருக்கிறேன், என்னை நன்கு கவனித்துக்கொள்கிறேன், நல்ல உடற்தகுதியோடும் நலத்துடனும் இருக்கிறேன், பிறகு எதற்கு எனக்கு நலக் காப்பீடு தேவை என்று நீங்கள் யோசிக்கலாம். COVID-19ஐத் தவிர இன்னும் பல விஷயங்களிலிருந்து நாம் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.

உங்களுடைய உடல்நலம் மிகச் சிறப்பாக இருந்தாலும், நீங்கள் போதுமான அளவு நலக் காப்பீட்டைப் பெறுவதுபற்றி இப்போதே சிந்திக்கத் தொடங்கவேண்டும். அதற்கான சில நல்ல காரணங்கள், இதோ.


உதவி தேவைப்படும்போது கிடைக்கும்

விபத்துகள், நோய்ப்பரவலின் எல்லைக்கு வெளியிலுள்ள நோய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். மருத்துவ நெருக்கடிகளைத் தவிர்க்க இயலாது; அவை திடீரென்று நிகழ்கின்றன; பொதுவாக அவற்றைச் சமாளிக்க மிகவும் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பது முக்கியம். மிகச் சிறந்த நலக் காப்பீடு இந்த விஷயத்தில் மக்களுடைய வாழ்க்கையை எளிதாக்குகிறது, அதன் வலைப்பின்னலில் உள்ள எந்தவொரு மருத்துவமனையிலும் நீங்கள் உங்களுடைய நல ID அட்டையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாத மருத்துவச் சிகிச்சை பெறலாம். உண்மையில், ICICI Lombard நலக் காப்பீட்டில் 4 மணிநேரத்துக்குள் ரொக்கமில்லாத சிகிச்சைக்கான அனுமதியைப் பெறலாம், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கவும், உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் சிகிச்சையைப் பெறவும் இது உதவும்.

தடுக்கலாம் & எளிதில் டாப் அப் செய்யலாம்மிகச் சிறிய பிரச்னைகளைக்கூட அவை தொடங்கும் நேரத்தில் கையாள்வதற்கு மருத்துவக் காப்பீடு உங்களுக்கு உதவுகிறது. இதன்மூலம், நீங்கள் பரிசோதனைகளைத் தள்ளிப்போடமாட்டீர்கள், சிறிய பிரச்னைகள் பெரிதாகாமல் கட்டுப்படுத்தலாம், அதனால் நிறையச் செலவு செய்து மருத்துவமனையில் சேர்வதைத் தடுக்கலாம். உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று தோன்றினால், டாப்-அப் செய்தால் போதும், காப்பீட்டுத் தொகை உயர்ந்துவிடும்.

பலவிதமான திட்டத் தெரிவுகள்

உங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது என்றாலும் சரி, எப்போதும் உடல்நலம் சரியில்லாமல் போவதில்லை என்றாலும் சரி, ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் உள்ளது. உங்களுடைய வருவாய் எப்படி இருந்தாலும் சரி, உங்களுக்கு ஏற்ற ஒரு காப்பீட்டுத் திட்டம் உள்ளது; அதைக் கண்டறிவதற்கு நீங்கள் சற்று ஆராய்ச்சி செய்தாலே போதும்.

ICICI


 

COVID-19 காப்பீடு

மிகவும் நம்பகமான காப்பீட்டுத் தீர்வுகள் காலத்துக்கேற்ப மாறுகின்றன. ICICI Lombard நலக் காப்பீட்டில் பல வசதிகள் இருக்கின்றன, குறிப்பாக, இந்தப் பன்னாட்டு நோய்ப்பரவலைக் கையாளும் வசதிகளும் உள்ளன. ஏற்கெனவே உள்ள நலக் காப்பீட்டுத் திட்டங்கள் COVID-19 உடன் தொடர்புடைய மருத்துவமனையில் சேர்த்தல் செலவுகளுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றன; ஒருவேளை நீங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டால், மருந்துகள் மற்றும் நோய் கண்டறிதல் பரிசோதனைகளால் ஆகும் செலவுகளை வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைப் பாதுகாப்பு கொண்ட திட்டங்கள் செலுத்துகின்றன. அத்துடன், நலம் மற்றும் தடுத்தல் நலப்பராமரிப்பு மற்றும் தாய்மைப் பலன்களைக் கொண்ட ஒரு கூடுதல் பாதுகாப்பும் உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு

விபத்தினால் நேரும் மரணம், நிரந்தர மொத்த ஊனம் போன்ற கடினமான விஷயங்களுக்கு எதிராக உங்களை நன்றாகக் காப்பது, நலக் காப்பீடுதான்.

வரிச் சலுகைகள்

சரியான காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை, மருத்துவ மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் செலவுகளுடன் அதன் பலன்கள் நின்றுவிடுவதில்லை. காப்பீட்டுத் திட்டங்கள் பல வரிச் சலுகைகளை வழங்குகின்றன, நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைச் சேமிக்க இவை உதவுகின்றன.

நாளை என்பது நம்பிக்கையால் நிரம்பியிருக்கலாம் அல்லது அச்சத்தால் நிரம்பியிருக்கலாம் என்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. போதுமான அளவு நலக் காப்பீட்டைப் பெற்றுக்கொண்டால், உங்களுடைய மன நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றம் வரலாம். இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இப்போதே தொடங்குங்கள்!

இங்கு க்ளிக் செய்து ICICI Lombardக்குச் செல்லுங்கள், உங்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த திட்டங்களில் ஓர் உடனடி விலைப்பட்டியலைப் பெறுங்கள்.

(இது தொழிற்கூட்டாளி வழங்கும் ஒரு பதிவு)

 
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading