Home /News /business /

சொந்தமாக பிஸினஸ் தொடங்க ஆசையா? ஐசிஐசிஐ வங்கி ரூ. 25 லட்சம் வரை கடன் தர்றாங்க தெரியுமா?

சொந்தமாக பிஸினஸ் தொடங்க ஆசையா? ஐசிஐசிஐ வங்கி ரூ. 25 லட்சம் வரை கடன் தர்றாங்க தெரியுமா?

லோன்

லோன்

ஐசிஐசிஐ வங்கி ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் வழங்கும் ரூ. 25 லட்சம் வரையிலான உடனடி கடனை பெறுவது எப்படி விவரங்களை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியுடன் சேர்ந்து ஓவர் டிராஃப்ட் வசதியில் ரூ. 25 லட்சம் வரையிலான கடனை தருகிறது. இதற்கு விற்பனையாளர்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் பதிவு செய்திருந்தாலே போதும். அதாவது ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளராகப் பதிவு செய்தவர்கள் ஈஸியாக இந்த கடனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் அதாவது வங்கி கணக்கில் பணம் இல்லாமலே இந்த கடன் பணத்தை எடுக்க முடியும்.

    யாரெல்லாம் இந்த கடனுக்கு விண்ணப்பிப்பது, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இப்போது பார்க்கலாம். சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் எளிதாகத் தொழில் தொடங்க ஏதுவாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் சேர்ந்து இந்த வாய்ப்பை தருகிறது. சொந்தமாக பிஸினஸ் தொடங்க ஆசை இருப்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளர்களாக பதிவுசெய்திருந்தாலே இந்த ஓவர் டிராஃப்ட் சலுகையை நீங்கள் பெறமுடியும். இந்த கடன் திட்டத்தின் சிறப்பம்சம் ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இல்லாமல் மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் கூட நீங்கள் இந்த கடனை பெற முடியும். அதற்கு ஐசிஐசிஐ வங்கியின் கரண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்தால் போதும்.

    அதே போல் ஐசிஐசிஐ வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு உடனடியாக ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் கடன் கிடைக்கும். டிஜிட்டல் முறையிலேயே கணக்கு தொடங்கலாம். அதற்கான கேஒய்சி சரிபார்ப்பு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி பேசிய ஐசிஐசிஐ வங்கியின் சுய வேலைவாய்ப்பு பிரிவு தலைவர் பங்கஜ் காட்கில் தொழில் தொடங்க நினைப்பவர்கள், சிறு தொழில் செய்பவர்களின் நலனுக்காகவே இந்த சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    எப்படி விண்ணப்பிப்பது ?

    1. தகுதியான விற்பனையாளர்கள் தங்கள் Flipkart Seller Hub அக்கவுண்ட் போர்ட்டலில் ICICI வங்கிச் சலுகையைக் காண முடியும்.

    2. Flipkart Seller Hub போர்ட்டலில் உள்ள பேனரைக் கிளிக் செய்வதன் மூலம் விற்பனையாளர் ICICI வங்கியின் 'InstaOD' தளத்திற்கு செல்வார்கள்.

    3. விற்பனையாளர் உள்நுழைந்ததும், டிஜிட்டல் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அனுமதித் தொகையை உறுதிப்படுத்த வேண்டும். விற்பனையாளரிடமிருந்து தொகை உறுதிசெய்யப்பட்டவுடன், OD உடனடியாக அனுமதிக்கப்படும். விற்பனையாளர் ஏற்கெனவே ஐசிஐசிஐ வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருந்தால்,உடனடியாக OD ஐப் பயன்படுத்தத் தொடங்கலாம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: ICICI Bank

    அடுத்த செய்தி