முகப்பு /செய்தி /வணிகம் / வாழ்நாள் முழுவதும் வருமானம்.. ஐசிஐசிஐ பேங்கின் இந்த திட்டம் பற்றி யாருகெல்லாம் தெரியும்?

வாழ்நாள் முழுவதும் வருமானம்.. ஐசிஐசிஐ பேங்கின் இந்த திட்டம் பற்றி யாருகெல்லாம் தெரியும்?

ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ

ஜாயிண்ட் ஹோல்டராக இருப்பவருக்கு வாழ்க்கை முழுவதுக்குமான உத்தரவாத வருமானம் கிடைக்கும்.

  • Last Updated :

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ புரொடென்ஷியல் ஆயுள் காப்பீடு நிறுவனம் சார்பில் அண்மையில் ஐசிஐசிஐ ப்ரூ என்ற பெயரில் உத்தரவாதத்துடன் கூடிய பென்சன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான ப்ரீமியம் கொண்ட ஆனுய்டி திட்டமாகும்.

வாடிக்கையாளர்கள் நீண்ட கால அடிப்படையில் ஓய்வு காலத்திற்கு சேமிக்க இது வழிவகை செய்கிறது. இதுகுறித்து ஐசிஐசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரும் சேமிப்பை நோக்கி வழக்கமான பங்களிப்பை வழங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஓய்வு காலத்தில் நீண்ட கால உத்தரவாத வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் போன்றோருக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI : உங்கள் பணத்திற்கு ஸ்டேட் பேங்கில் அதிக வட்டி கிடைக்க போகுது! எப்படி தெரியுமா?

7 வகைகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

வாடிக்கையாளர்களின் பல்வேறு விதமான தேவைகள் கருதி, 7 விதங்களில் உத்தரவாத ஓய்வூதிய பிளெக்ஸி திட்டத்தை ஐசிஐசிஐ ப்ரூ வங்கி வழங்குகிறது. அதில், ஆக்சிலரேட்டட் ஹெல்த் பூஸ்டர்ஸ் உடன் கூடிய லைஃப் ஆனுய்டி மற்றும் பூஸ்டர் பே-அவுட்களுடன் கூடிய லைஃப் ஆனுய்டி ஆகியவை சிறப்புவாய்ந்த திட்டங்களாகும்.

வாழ்நாள் முழுவதுக்கும் உத்தரவாதத்துடன் கூடிய வருமானம் மற்றும் மருத்துவ தேவைகள், வாழ்வியல் நடைமுறைகளை எதிர்கொள்வதற்கான கூடுதல் நிதியுதவி வாய்ப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஐசிஐசிஐ ப்ரூ வங்கி விளக்கம் அளித்துள்ளது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 உதவித்தொகை வழங்கப்படும் தகவல் உண்மையா?

ஆக்சிலரேட்டட் மெடிக்கல் பூஸ்டர்

ஆக்சிலரேட்டட் மெடிக்கல் பூஸ்டர் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள், அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் உடல் ரீதியான பிரச்சனைகளை பரிசோதனைகள் மூலமாக கண்டறியும்போது அவர்களுக்கு அடிஷனல் பேஅவுட் ஆப்சன் கிடைக்கும்.

பூஸ்டர் பேஅவுட்

ஆனுய்டி திட்டங்களில் நீங்கள் பூஸ்டர் பேஅவுட் ஆப்சனை தேர்வு செய்யும்போது உங்களுக்கு ஆனுய்டி பலன்களுடன் 5 லட்சம் பேமெண்ட் பலன்கள் கிடைக்கின்றன. ஓய்வு காலத்திற்கு பிறகான பயணங்கள், பொழுதுபோக்கு அல்லது பேரன், பேத்திகளுக்கு பரிசளிக்க விரும்புவது போன்றவற்றுக்காக திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

ஜாயிண்ட் லைஃப் ஆனுய்டி ஆப்சன்

ஐசிஐசிஐ ப்ரூ வங்கி வழங்கும் ஜாயிண்ட் லைஃப் ஆனுய்டி ஆப்சனை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் கீழ் இரண்டு நபர்கள் கூட்டாக திட்டத்தில் சேர முடியும். அதில் ப்ரீமியம் செலுத்தும் காலத்தில் ஒருவர் மறைந்து விட்டார் என்றால், எஞ்சியுள்ள நபருக்கு ப்ரீமியம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

எதிர்கால ப்ரீமியம் அனைத்தும் ரத்து செய்யப்படும் அதே வேளையில், திட்டத்தில் ஜாயிண்ட் ஹோல்டராக இருப்பவருக்கு வாழ்க்கை முழுவதுக்குமான உத்தரவாத வருமானம் கிடைக்கும். அந்த ஜாயிண்ட் ஹோல்டரும் மறையும் பட்சத்தில், மொத்த முதலீட்டு ப்ரீமியங்கள் அனைத்தும் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: ICICI Bank, Insurance, Life Insurance