ஹோம் /நியூஸ் /வணிகம் /

இன்றுடன் முடிவடைகிறது.. இனி ஐசிஐசிஐ வங்கியில் இந்த சேமிப்பு திட்டம் கிடையாது!

இன்றுடன் முடிவடைகிறது.. இனி ஐசிஐசிஐ வங்கியில் இந்த சேமிப்பு திட்டம் கிடையாது!

ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ

இனி யாரும் இதில் முதலீடு செய்ய முடியாது. ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் தொடர்ந்து பலன்களை பெறுவார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐசிஐசிஐ வங்கியில் மூத்த குடிமக்களுக்காகவே இருந்த சிறப்பு பிக்டட் டெபாசிட் சேமிப்பு திட்டம் இன்றுடன் முடிவடைகிறது. இனி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

  சமீபத்தில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இந்த நேரத்தில் முக்கிய வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கின. சிறு முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு வட்டியை உயர்த்தி அறிவித்தன. இதற்கு முன்பே ஐசிஐசிஐ வங்கி  குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய golden years fixed deposit என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் பல சலுகைகளையும் அறிவித்து இருந்தது. இந்த சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

  இந்த 3 டிப்ஸ்களை மட்டும் ஃபாலோ செய்யுங்கள்.. உங்கள் சிபில் ஸ்கோர் எகிறும்!

  இந்நிலையில் இந்த திட்டமானது இன்றுடன் நிறைவடைகிறது. இனி யாரும் இதில் முதலீடு செய்ய முடியாது. ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் தொடர்ந்து பலன்களை பெறுவார்கள். golden years திட்டத்தின் கீழ், ஐசிஐசிஐ வங்கி இந்திய குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் விகிதத்தை விட கூடுதலாக 0.10% வருடாந்திர வட்டியை வழங்குகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கணக்குகள் மற்றும் திட்டத்தின் செயல்பாட்டின் போது புதுப்பிக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கும் அதிக வட்டி விகிதம் வழங்கி வந்தது.இந்நிலையில் இந்தத் திட்டம் அக்டோபர் 7, 2022 (இன்றுடன்) நிறைவடைகிறது.

  ஐசிஐசிஐ வங்கியின் golden years திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் மற்றும் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை. இதில் பொது மக்கள் 6.00% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள், மூத்த குடிமக்களுக்கு 6.60% வழங்கப்படுகிறது. இது வழக்கமான விகிதங்களுக்கு மேல் 60 பிபிஎஸ் கூடுதல் வட்டியாகும். ஐசிஐசிஐ வங்கியில் ரூ2 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்கள் golden years திட்டத்தில் பொருந்தும்.

  வயசாயிடுச்சு முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

  golden years திட்டத்தில் பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு ஐசிஐசிஐ வங்கி அபராதம் விதித்துள்ளது. “பிக்சட் டெபாசிட் திட்டம் திறக்கப்பட்டு, அது முன் கூட்டியே திரும்பப் பெறப்பட்டால்/மூடப்பட்டால், 5 ஆண்டுகள் 1 நாளுக்குப் பிறகு, பொருந்தக்கூடிய அபராத விகிதம் 1.10% ஆகும். இந்த திட்டத்தில் பணம் முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டாலும் இந்த விதி பொருந்தும்." என தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Fixed Deposit, ICICI Bank, Savings