Home /News /business /

ஜனவரி 1 முதல் இதற்கெல்லாம் கட்டணம்.. ஐசிஐசிஐ வங்கி கஸ்டமர்ஸூக்கு கொடுத்த ஷாக்!

ஜனவரி 1 முதல் இதற்கெல்லாம் கட்டணம்.. ஐசிஐசிஐ வங்கி கஸ்டமர்ஸூக்கு கொடுத்த ஷாக்!

ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் 5 முறை பணம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து பணம் எடுக்கும் போது ரூ. 20 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜனவரி 1ம் தேதி முதல் சேவைக் கட்டணம் ரூ. 21 .

    ஜனவரி 1ம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கியில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

    ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக இந்த தகவலை தெரிந்து கொள்வது நல்லது, ஜனவரி 1 முதல் வங்கியில் எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும், வரும் போகும் சேவை மாற்றங்கள் என்ன என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அதாவது ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்களில் மாற்றத்தை கொண்டு வரவுள்ளது.

    ஏ.டி.எம். பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களையும் உயர்த்தவுள்ளன. ஐசிஐசிஐ ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது முதல் ஐந்து முறை பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை. ஆனால் அதற்கு அடுத்து பணம் எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும். ஜனவரி 1, 2022 முதல் இந்த கட்டணம் ரூ. 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியற்ற இதர வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் இருந்து முதல் மூன்று முறை பணம் எடுக்கும் போது கட்டணம் கிடையாது. இது சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, மற்றும் டெல்லி மெட்ரோகளில் மட்டுமே பொருந்தும்.  இதர இடங்களில் 5 முறை பணம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து பணம் எடுக்கும் போது ரூ. 20 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜனவரி 1ம் தேதி முதல் சேவைக் கட்டணமாக ரூ. 21 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற நிதிசாரா பணப்பரிவர்த்தனைகளான இருப்பு தொகையை அறிந்து கொள்வது, மினி ஸ்டேட்மெண்ட்களை பெறுதல் மற்றும் பின் எண்ணை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. அவை முற்றிலும் இலவசம். இந்த புதிய மாற்றம் புதிய ஆண்டு 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

    எனவே, வாடிக்கையாளர்கள் இதை தெரிந்து கொள்வது நல்லது. நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் ஐசிஐசிஐ வங்கியின் இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்களை கோபமடைய செய்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: ATM, ICICI Bank

    அடுத்த செய்தி