Home /News /business /

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்; வட்டி விகிதம் உயர்வு!

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்; வட்டி விகிதம் உயர்வு!

இந்திய ரூபாய் நோட்டுகள்

இந்திய ரூபாய் நோட்டுகள்

ICICI Bank : ஆகஸ்ட் 19ம் தேதி அன்று ஐசிஐசிஐ வங்கி தனது ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்த நிலையில், தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Vadodara, India
    பணத்தை சேமிக்க வேண்டும் என்றும் வரும் போது மக்கள் கண்களை மூடிக்கொண்டு வங்கி சேமிப்பு திட்டங்களில் தான் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக ஃபிக்சட் டெபாசிட்கள் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பாதுகாப்பையும், அதிக வட்டி விகிதத்தையும் அளிக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட மக்கள் அதிக வட்டி தரக்கூடிய ஃபிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டும், தனது வாடிக்கையாளர்களை ஃபிக்சட் டெபாசிட் செய்ய ஊக்குவிக்கும் விதமாகவும் ஐசிஐசிஐ வங்கி தனது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது.

    இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கக்கூடிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்கப்படு வந்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,“வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 3.50 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதமான ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

    ஐசிஐசிஐ ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்:

    முதிர்வு காலம் 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையுள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3.50 சதவீதமும், 30 முதல் 45 நாட்கள் வரையுள்ள டெர்ம் டெபாசிட்களுக்கு 3.60 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.

    46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை முதிர்வு காலம் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 4 சதவீதமாகவும், 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையுள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 4.7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ALSO READ | மளிகை விற்பனையை நிறுத்திய மீஷோ.. 300 ஊழியர்களின் வேலை பறிபோனது

    ஐசிஐசிஐ வங்கி இப்போது 91 நாட்களில் இருந்து 184 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.25 சதவீதமும், 185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.40 சதவீதமும் வட்டி வழங்க உள்ளது.

    271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் நிறைவடையக்கூடிய ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட உள்ளது. இதேபோல் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.50 சதவீத வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.90 சதவீத வட்டி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ  | ஐ.டி. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொன்ன சூப்பர் அறிவிப்பு

    இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 19ம் தேதி அன்று ஐசிஐசிஐ வங்கி தனது ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்த நிலையில், தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை தனிநபர் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்தைக் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 6.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.60% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Digital Transaction, Fixed Deposit, ICICI Bank

    அடுத்த செய்தி