ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!

ஐசிஐசிஐ பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

ரிசர்வ் வங்கி ரெப்கோ வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்ததை அடுத்து வீட்டுக்கடன், தனிநபர் கடன் மீதான வட்டி மட்டும் உயர்ந்துவிட்டது. ஆனால் கஷ்டப்பட்டு சேர்க்கும் காசுக்கு வட்டி உயரவில்லையே என வருத்தப்பட்டவர்களை குஷியாக்கும் விதமாக ஐசிஐசிஐ வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு:

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி, ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது. புதிய ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்வு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளன, மேலும் ரூ.2 கோடிக்கு மேல்  ரூ.5 கோடி வரை உள்ள டெபாசிட்டுகளுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ விகிதங்களை உயர்த்தியதன் விளைவாக ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களையும் உயர்த்தியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி தற்போது, ரூ. 2 கோடிக்கு மேல் ஆனால் ரூ.5 கோடிக்கு குறைவான மற்றும் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு, 3.10 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.

LIC தரும் அசத்தலான வாய்ப்பு.. ரூ. 55 லட்சத்தை சொந்தமாக்க தினமும் ரூ. 253 சேமியுங்கள்!

தற்போது ஐசிஐசிஐ வங்கி, 185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.25 சதவீதமாகவும், அதே சமயம் 271 நாட்கள் முதல் ஓராண்டுக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 5.35 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 390 நாட்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 5.40 சதவீதத்தில் இருந்து 5.60 சதவீதமாகவும், 18 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலங்களுக்கான வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.75 சதவீதமாக அதிகரிப்பட்டுள்ளது.

ஜூலை 11, 2022 முதல் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இங்கே:

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.10 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.10 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

இத்தனை வகை வங்கி மோசடிகள் நடக்குதாம்.. மக்களே உஷார்!

61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்

121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்

151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்

185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்

211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்

271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.35 சதவீதம்

290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.35 சதவீதம்

1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம்

390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம்

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்

18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்

3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: ICICI Bank, Savings