Home /News /business /

ஐசிஐசிஐ வங்கியின் புதிய FD வட்டி வகிதம் இன்று முதல் அமல்..!

ஐசிஐசிஐ வங்கியின் புதிய FD வட்டி வகிதம் இன்று முதல் அமல்..!

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD என்னும் நிரந்திர வைப்பு நிதித் திட்டங்களை வழங்குகிறது.

  • News18
  • Last Updated :
ஐசிஐசிஐ வங்கியில் இன்று முதல் நிரந்தர வைப்புநிதிக்கான புதிய வட்டி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD என்னும் நிரந்திர வைப்பு நிதித் திட்டங்களை வழங்குகிறது. இதர வாடிக்கையாளர்களை விட மூத்த வாடிக்கையாளர்களுக்கு 50 பைசா வட்டி அதிகம். இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

தற்போதைய புதிய மாற்றத்தின் அடிப்படையில், குறைந்தகால வைப்புகளுக்கான நிரந்தர வைப்பு நிதியில் மாற்றமில்லை. அதாவது 7 நாட்கள் முதல் 14 நாட்க வரையிலான வைப்பு நிதிக்கு 4 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. 15 முதல் 29 நாட்களுக்கு 4.25% வட்டி, 30 முதல் 45 நாட்களுக்கு 5% வட்டி வட்ழங்கப்படுகிறது.

46 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் 5.50% வட்டி வழங்கப்படுகிறது. 185 முதல் 289 நாட்களுக்கு 6% வட்டி, முதிர்காலம் உடனான வைப்பு நிதி என்றால் 185 முதல் 289 நாட்களுக்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது.

HDFC வங்கியின் FD வட்டி வகிதம் 3.50%- 6.85% வரை கொடுக்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி 4.5% - 6.4% வரை வட்டி தருகிறது. ஆக்சிஸ் வங்கியில் 3.5% - 6.90% வரையில் வட்டி கிடைக்கும்.

மேலும் பார்க்க: வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

வங்கி கணக்கில் பறிபோன பணம்... பதறாத வங்கி
Published by:Rahini M
First published:

Tags: ICICI Bank

அடுத்த செய்தி