Home /News /business /

பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க.. பிரபல வங்கியில் மாறிய ரூல்ஸ்!

பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க.. பிரபல வங்கியில் மாறிய ரூல்ஸ்!

பிரபல வங்கியில் புதிய விதிமுறை

பிரபல வங்கியில் புதிய விதிமுறை

வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இவற்றை நோட் செய்வது மிகவும் அவசியமான ஒன்று.

    தனியார் வங்கிகள் அடிக்கடி மாற்றும் ரூல்ஸ்களால் வாடிக்கையாளர்கள் குழம்புவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் இன்று நீங்கள் பார்க்க போவது ஐசிஐசிஐ வங்கியில் சமீபத்தில் மாறிய ரூல்ஸ்.

    ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் இன்டெர்சார்ஜ் மற்றும் காசோலை புத்தகங்களுக்கான கட்டணங்களை மாற்றியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலே இது அமலுக்கு வந்து விட்டது. இந்த மாற்றங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். வங்கியின் புதிய விதிமுறைப்படி மாதம் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

    வங்கிக் கணக்கு திறக்கப்பட்ட கிளையில்மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும்.ஜாயிண்ட் அக்கவுண்டைப் பொருத்தவரையிலும் மற்ற கிளைகளில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும். மூன்றாம் நபர் பரிவர்தனைக்கும் இது பொருந்தும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒரு வருடத்திற்கு 25 செக் லீப்களுக்கு கட்டணங்கள் இல்லை. அதற்கு மேல் ஒவ்வொரு 10 செக் லீப்களுக்கும் ரூ.20 கட்டணம்.சீனியர் சிட்டிசன்கள் கணக்குகளுக்கு தினம் 25,000 ரூபாய் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைகளை பொறுத்தவரை, தினம் 25,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படாது.

    also read எஸ்பிஐ-ல் அக்கவுண்ட் வச்சிருங்கீங்களே இந்த தகவல் தெரியுமா?

    இதுப்போல் ஏகப்பட்ட விதிமுறை மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இவற்றை நோட் செய்வது மிகவும் அவசியமான ஒன்று.
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: ICICI Bank

    அடுத்த செய்தி