வங்கிக்கு நேரில் செல்ல வேண்டாம்.. ஆன்லைனிலே ரூ.1 கோடி வரை கடன் கொடுக்குறாங்க தெரியுமா?

ஆன்லைனில் 1 கோடி வரை கடன்

ரூ. 50 லட்சம் உள்நாட்டில் கல்வி கற்கவும் கடனாக பெற்றுக் கொள்ள முடியும்

  • Share this:
    அட உண்மையாதான் நம்புங்க மக்களே.. ஐசிஐசிஐ வங்கியில் ஆன்லைனில் ரூ. 1 கோடி வரை கடன் கொடுக்குறாங்க தெரியுமா?

    ஐசிஐசிஐ வங்கியின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டக்குரியது தான். ஏன் தெரியுமா? இந்த ஆன்லைன் வழியாக ரூ.1 கோடி வரையிலான கடன் கல்வி கடன் ஆகும். மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு. அதுவும் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு நீங்கள் icicibank.com சென்று பார்க்கவும்.

    இந்த கல்வி கடனானது இன்ஸ்டான்ட் எஜூகேஷன் லோன் எனப்படும் ப்ரீ அப்ரூவ்ட் லோனாக ஆகும். குறைந்த அளவிலான ஆவணங்கள் மட்டுமே போதும்.வங்கியில் முன் ஒப்புதல் அளித்து வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்லது உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த கடனை பெறலாம். அதுவும் ஐசிஐசிஐ வங்கி இந்த கடனை பிணையமின்றி வழங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முழுக்க முழுக்க இணைய சேவை மூலமாகவே இந்த கடனை பெறலாம். கடனுக்கு முன் ஒப்புதல் பெற வீட்டிலிருந்தே அனுமதி கடிதத்தை பெறலாம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க மாணவர்கள் குறைந்தபட்சமாக ரூ. 1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும். அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலவும், ரூ. 50 லட்சம் உள்நாட்டில் கல்வி பயிலவும் கடனாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு வட்டியாக 9.25 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. ரெப்போ புள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சரியான ஆவணங்களுடன் முயற்சித்தால் மாணவர்கள் இந்த கடனை எளிதில் பெற முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: