ஹோம் /நியூஸ் /வணிகம் /

அந்த முக்கியமான சேமிப்பு திட்டத்துக்கு வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி!

அந்த முக்கியமான சேமிப்பு திட்டத்துக்கு வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி!

ஐசிஐசிஐ பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவில் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ அக்டோபர் 31ம் தேதி முதல் தனது பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.

  கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கக்கூடிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதத்தை அக்டோபர் 31ம் தேதி முதல் மீண்டும் உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக அக்டோபர் மாத தொடக்கத்தில் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தி இருந்தது.

  உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 6 சேமிப்பு திட்டங்கள்..!

  தற்போது ஐசிஐசிஐ வங்கி, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது. அதன்படி 46 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை உயர்த்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3 முதல் 6.25 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.50 முதல் 6.95 சதவீதம் வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகள் வரையுள்ள ஃபிக்சட் டெபாட்சிகளுக்கு 6.35 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.85 சதவீதமும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.25 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 6.95 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.

  ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3.75 முதல் 6.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது. இந்த வட்டி விகிதமானது ஃபிக்சட் டெபாசிட்டின் கால அளவு மற்றும் டெபாசிட் செய்பவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..! - 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை வருமானம் தரும் திட்டம்!

  ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இதோ:

  7 நாட்கள் முதல் 14 நாட்கள் மற்றும் 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான கால அளவுள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3 சதவீதம் வட்டியும், இதே கால அளவில், மூத்த குடிமக்களின் FD-க்கு 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

  30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான கால அளவுள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3.50 சதவீதமும், இதே கால அளவில், மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 3.75 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

  61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது; இதே கால அளவில், மூத்த குடிமக்கள் FD கணக்குகளுக்கு 4.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

  91 நாட்கள் முதல் 120 நாட்கள், 121 நாட்கள் முதல் 150 நாட்கள், 151 முதல் 184 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 4.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  185 நாட்கள் முதல் 210 நாட்கள், 211 முதல் 270 நாட்கள், 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையிலான கால அளவுள்ள FD கணக்குகளுக்கு 5.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  290 நாட்கள் முதல் ஓராண்டிற்கும் குறைவான கால அவகாசம் உள்ள ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 5.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  1 வருடம் முதல் 389 நாட்கள், 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான நாட்கள், 15 மாதங்கள் முதல் 18 மாதங்களும் குறைவான நாட்களைக் கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 6.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  2 வருடம் முதல் 389 நாட்கள், 390 நாட்கள் முதல் 15 மாதங்கள், 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் ஆகிய 4 வகையான ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் பொதுமக்களுக்கு 5.70 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்கள் மீது சாமானிய மக்களுக்கு 6.15 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.65 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

  2 ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட டெபாசிட்களுக்கு 6.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு 6.70 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

  3 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு 6.35 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.85 சதவீதமும் வட்டி கிடைக்கும்.

  5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு 6.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.95 சதவீதமும் வட்டி கிடைக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Fixed Deposit, ICICI Bank, Savings