10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - ஐசிஐசிஐ வங்கியின் புதிய அறிவிப்பு!

ஐ.சி.ஐ.சி.ஐ

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது குறைக்கப்பட்டுள்ள வீட்டு கடன் வட்டி விகிதமானது தங்களது வங்கியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைவான வட்டி விகிதம் என்று ஐசிஐசிஐ கூறி உள்ளது. தற்போது குறைக்கப்பட்டுள்ள வட்டி விகித பலனை, ரூ 75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70%- ஆக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே போல ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.75%ஆக இருக்கும். இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்களை இந்த மாதம் முழுவதும் அதாவது மார்ச் 31 2021 வரை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் ஐசிஐசிஐ வங்கி கூறி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர் இல்லையா நீங்கள்.!

புதிய வீடு வாங்கும் முயற்சியில் இருக்கும் நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளராக இல்லாமல் இருந்தாலும், உங்களால் தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கியின் வீட்டு கடனுக்கான குறைந்த வட்டி விகித பலனை பெற முடியும். அதற்கு நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் வெப்சைட் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் வீட்டுக் கடன்களுக்கு டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

இல்லையெனில் வசதியான டிஜிட்டல் அனுபவத்தை பெற உங்களுக்கு அருகிலுள்ள ஐசிஐசிஐ வங்கி கிளைக்கும் நீங்கள் செல்லலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டு கடனுக்கு விண்ணப்பிப்போர் தங்கள் கடனை உடனடியாக டிஜிட்டல் முறையில் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... ஹெச்.டி.எப்.சி வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மூத்த அதிகாரியான ரவி நாராயணன் பேசுகையில், கடந்த சில மாதங்களாக, தங்கள் சொந்த தேவைகளுக்காக வீடுகளை வாங்க விரும்புவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதை கண்டோம். இதனிடையே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறைந்த வட்டி விகிதங்களை பயன்படுத்தி, ஒரு நபர் தனது கனவு வீட்டை வாங்க இது ஒரு சரியான தருணமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். வேறு எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் உடனடி அனுமதி உட்பட முற்றிலும் டிஜிட்டல் வசதி செய்யப்பட்டுள்ள வீட்டுக் கடன் நடைமுறை மூலம், எங்களிடம் வீட்டுக் கடனை பெறுவது அனைவருக்கும் மிகவும் வசதியாக இருக்கும் என்றார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (HDFC Ltd) போன்ற கடன் வழங்குநர்கள் தங்களது வீட்டுக் கடன் விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: