ஐசிஐசிஐ வங்கி எந்தெந்த காரணத்திற்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருந்தால் மட்டும் போதாது. அந்த வங்கிகளில் என்னென்ன ரூல்ஸ் ஃபாலோ செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் உங்கள் கடமை தான். அதே போல், நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எதற்கெல்லாம் உங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போது உங்கள் வங்கியிலிருந்து இந்த காரணத்திற்காக செயலாக்க கட்டணம் உங்கள் அக்கவுண்டிலிருந்து பிடித்த செய்யப்பட்டது என்ற குறுஞ்செய்தி வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. எதற்காக அந்த கட்டணம் பிடிக்கப்பட்டுள்ளது என நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
அந்தவகையில் நீங்கள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு கண்டிபாக யூஸ் ஆகும். அதாவது ஐசிஐசிஐ வங்கி எந்த காரணத்திற்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது என்ற தகவலை தெரிந்து கொள்ளுங்கள். பண பரிவர்த்தனை கட்டணங்களைப் பொருந்தவரையில் மாதத்திற்கு முதல் 4 பரிவர்த்தனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைத்ராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் இலவசமாக செய்யலாம். இவை தவிர மற்ற பகுதிகளில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசம். அதை மீறும் போது அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமாகும். காசோலை கட்டணத்தைப் பொருத்தவரையில் ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு இலவசம் தான். அதற்கு மேற்பட 10 காசோலைகள் கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் 20 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சில்வர் சேமிப்பு சம்பள கணக்கில் மாதத்திற்கு 4 இலவச பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.இதுப்போன்ற பொதுவான தகவல்களை எப்போதும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.