ரெட் ஹாட் நிறுவனத்தை 34 கோடி டாலர் கொடுத்து வாங்கியது ஐபிஎம்!

ரெட் ஹாட் நிறுவனத்தை 34 கோடி டாலர் கொடுத்து வாங்கியது ஐபிஎம்!
ஐ.பி.எம்
  • News18
  • Last Updated: July 10, 2019, 10:08 AM IST
  • Share this:
உலகின் மிகப் பெரிய ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம், ஓபன் சோர்ஸ் மென்பொருள் நிறுவனமான ரெட் ஹாட் நிறுவனத்தை 34 கோடி டாலர் கொடுத்து வாங்கியுள்ளது.

ஐபிஎம் நிறுவனத்தின் 100 வருட வரலாற்றில் முதல் முறையாக, இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

ரெட் ஹாட் நிறுவனத்தை 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதமே ஐபிஎம் வாங்க ஒப்புக்கொண்டது. அதன் படி ஒரு பங்குக்கு 190 டாலர்களை ஐபிஎம் அளித்துள்ளது. ரெட் ஹாட் பங்குகளுக்கு 63 சதவீதம் பிரீமியம் விலை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.


தொழில்நுட்ப நிறுவனங்கள் வரலாற்றில் இரண்டாம் மிகப் பெரிய விற்பனை இது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

ரெட்ஹாட்


1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரெட் ஹாட் உலகின் பிரபலமான லினக்ஸ் இயங்குதளத்திற்கு பேர் போன ஒரு நிறுவனம் ஆகும். கணினி இயங்குதளத்தில் மைக்ரோசாப்டுக்கு போட்டியாக இந்த நிறுவனம் இருந்தது.ரெட் ஹாட் நிறுவனம் தற்போது அடுத்த தலைமுறை ஹைபிரிட் கிளவுட் தளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இது அமேசான் வெப் சர்வீஸ், மைக்ரோசாப்ட் அஸ்யூர் போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.

2013-ம் ஆண்டு முதல் ஐபிஎம்-ன் கிளவுட் சேவைகள் வருவாய் அதிகரித்து வருகிறது. தற்போது ரெட் ஹாட்டும் இணையும் போது நடப்பு ஆண்டு முதல் கூடுதல் வருவாயை ஐபிஎம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட் ஹாட் நிறுவனத்தை வாங்கியது குறித்து அதிகாரப்பூர்வமாக ஐபிஎம் அறிவித்துள்ள நிலையில், நேற்றைய சந்தை நேர முடிவில் ஐபிஎம் பங்குகளின் மதிப்பு 0.9 சதவீதம் சரிந்து 139.33 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் பார்க்க:
First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்