Spotify, Wipro, Microsoft, Google, Amazon மற்றும் Dunzo உள்ளிட்ட பல நிறுவனங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகப்படியான பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இதை தொடர்ந்து அமெரிக்காவின் பிரபல சர்வதேச வணிக இயந்திரங்கள் கழகம் IBM ஆனது அதன் பண இலக்குகளை அடையத் தவறியதால் 3900 பணியாளர்களை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பணப்புழக்கம் 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இருப்பினும், அதிக செயல்பாட்டு மூலதனம் காரணமாக இலக்கு 10 பில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டது. நிறுவனத்தின் மென்பொருள் மற்றும் ஆலோசனை வணிகமும் Q4 இல் குறைந்துள்ளது, நிறுவனத்தின் ஹைப்ரிட் கிளவுட் வருவாய் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. IBM 5.5 சதவிகிதம் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிகமானதாகும். அனால் அவர்கள் திட்டமிட்டிருந்த இலக்கை விட இது குறைவு.
இதையும் படிங்க: இனி ரூ.99 இல்லை! குறைந்தபட்ச ரீசார்ஜ்பேக் விலையை 57% உயர்த்திய ஏர்டெல்
அதேசமயம், IBM வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில மாதங்களில் 2% வரை சரிந்தன. இதனால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்பது சரிவை சந்தித்துள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக தற்போது தனது பணியாளர்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதிலும், ஐபிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான Kyndryl Holdings நிறுவனத்தில் அதிகளவில் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜேம்ஸ் கவானாக் கூறுகையில், நிறுவனம் இன்னும் வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பணியமர்த்துவதில் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார். எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும் அல்லது முதல் சுற்று பணிநீக்கங்கள் எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை . இதுமட்டுமல்லாமல், சில சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் ஐபிஎம் முடிவு செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IBM