மே 6 முதல் ஹூண்டாய் தொழிற்சாலை திறப்பு...! 50 % ஊழியர்களுடன் இயங்கும்

ஊழியர்களின் நலன் கருதி ஆலையில் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் முழுமையாக பின்பற்றப்படும் என உறுதி அளித்துள்ளது.

மே 6 முதல் ஹூண்டாய் தொழிற்சாலை திறப்பு...! 50 % ஊழியர்களுடன் இயங்கும்
ஹூண்டாய்
  • Share this:
தமிழகத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் நாளை மறுநாள் முதல் செயல்பட உள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது. ஊரடங்கால் மூடப்பட்ட ஹூண்டாய் உற்பத்தி தொழிற்சாலையை 50 சதவீத ஊழியர்களுடன் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார நடவடிக்கை தொடங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள அனுமதியை வரவேற்பதாகவும், மே 6 முதல் இருங்கட்டுகோட்டையில் ஆலைப் பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊழியர்களின் நலன் கருதி ஆலையில் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் முழுமையாக பின்பற்றப்படும் என்றும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also see...
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading