2020-ல் நாடு முழுவதும் கூடுதலாக 11 ஹோட்டல்கள் திறக்கப்படும் - ஹயாத்

'இந்தியா எங்களுக்கான மிகப்பெரிய களம் ஆகும். விரைவில் இரண்டாம் மற்றும் மூன்றம் நிலை நகரங்களுக்கும் விரிவாக்குவோம்'.

2020-ல் நாடு முழுவதும் கூடுதலாக 11 ஹோட்டல்கள் திறக்கப்படும் - ஹயாத்
ஹயாத்
  • News18
  • Last Updated: December 27, 2019, 7:12 PM IST
  • Share this:
சர்வதேச ஹோட்டல் நிறுவனங்களுள் ஒன்றான ஹயாத் ஹோட்டல்ஸ் கார்ப்பரேஷன் வருகிற 2020-ம் ஆண்டில் நாடு முழுவதும் புதிதாக 11 ஹோட்டல்களை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சிக்காகோ நகரை தலையிடமாகக் கொண்ட ஹயாத் இந்தியாவில் 8 பிராண்டுகளின் கீழ் சுமார் 32 ஹோட்டல்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஹயாத், ஹயாத் சென்ட்ரிக், ஹயாத் ப்ளேஸ், பார்க் ஹயாத், க்ராண்ட் ஹயாத், அலிலா மற்றும் அந்தாஸ் ஆகிய 8 பிராண்டுகளின் கீழ் ஹோட்டல் நிர்வாகம் செயல்படுகிறது.

35 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் முதன்முறையாக 1982-ம் ஆண்டு டெல்லி ஹோட்டல் மூலம் கால்பதித்தது ஹயாத். இந்தியாவுக்கு வந்த முதல் சர்வதேச ஹோட்டல் நிர்வாகம் ஹயாத்தான். இதுகுறித்து ஹயாத் இந்தியாவின் துணைத் தலைவர் சஞ்சே சர்மா, “எங்களது சந்தை நிலவரத்தின்படி 2020-ல் இந்தியாவில் புதிதாக 11 ஹோட்டல்கள் என்பது மிக முக்கியமான வளர்ச்சி.


புதிய 11 ஹோட்டல்களும் க்ராண்ட் ஹயாத், ஹயாத் ப்ளேஸ் மற்றும் ஹயாத் ரீஜென்சி ஆகிய பிராண்டுகளின் கீழ் செயல்படும். புதிதாக குருகிராம், வதோதரா, ஜெய்பூர், பெங்களூரு, திரிச்சூர், கொச்சி, டேராடூன், திருவனந்தபுரம், உதய்பூர் ஆகிய இடங்களில் ஹயாத் வர உள்ளது. இந்தியா எங்களுக்கான மிகப்பெரிய களம் ஆகும். விரைவில் இரண்டாம் மற்றும் மூன்றம் நிலை நகரங்களுக்கும் விரிவாக்குவோம்” என்றார்.

மேலும் பார்க்க: மிகையான வருமானம்... ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு ₹230.4 கோடி அபராதம்!
First published: December 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்