வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) எந்தவொரு சம்பளப் பணியாளரின் சம்பளத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அடிப்படை சம்பளத்தைப் போலன்றி, முழுமையாக வரி விதிக்கப்படாது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பழைய வருமான தாக்கல் முறைப்படி HRA இன் ஒரு பகுதி வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (13A) இன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால், ஒரு ஊழியர் தனது சொந்த வீட்டில் குடியிருந்தால் அல்லது அவர் வாடகை எதுவும் செலுத்தவில்லை என்றால், முதலாளியிடமிருந்து பெறப்பட்ட HRA முழுமையும் வரிக்கு உட்பட்டதாகும். இது பழைய முறையை தெரிந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே. நீங்கள் 2021-22 நிதியாண்டில் புதிய வருமான வரி முறையைத் தேர்வுசெய்தால், HRA மீது நீங்கள் வரி விலக்கு கோர முடியாது.
யாருக்கு உரிமை?
HRA பெரும் ஊழியர்கள் வாடகை வீட்டில் தங்கியிருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள் இந்த விலக்கைப் பெற முடியாது. கணக்கீட்டு நோக்கத்திற்காக, கருதப்படும் சம்பளம் 'அடிப்படை சம்பளம்'. அகவிலைப்படி (டிஏ)' இருந்தால், கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச HRA விலக்கைக் கணக்கிடுவதற்கு அவையும் சேர்க்கப்படும்.
எவ்வளவு HRA வரி விலக்கு அளிக்கப்படுகிறது?
HRA க்கான வரிவிலக்கு என்பது,i ) பெறப்பட்ட உண்மையான HRA அல்லது ii) மெட்ரோ நகரங்களில் வாழ்ந்தால் சம்பளத்தில் 50% அல்லது மெட்ரோ அல்லாத நகரங்களுக்கு 40%; மற்றும் iii ) வருடாந்திர சம்பளத்தில் 10% க்கும் அதிகமாக ஆண்டுதோறும் செலுத்தப்படும் வாடகை இந்த மூன்று விதிகளில் எது குறைவாக வருகிறதோ அதே விலக்கு பெரும்.
HRA விலக்கு கோருவதற்கான முக்கிய ஆவணங்கள்
வீட்டு உரிமையாளருடன் வாடகை ரசீதுகள் அல்லது வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்தால் மட்டுமே HRA விலக்குகளைப் பெற முடியும். வரிச் சலுகையைப் பெற, ஆண்டுக்கு ரூ. 1,00,000க்கு மேல் வாடகை செலுத்தப்பட்டால், ஒரு ஊழியர் 'நில உரிமையாளரின்' பான் எண்ணை முதலாளியிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
வருமான வரி விலக்கு பிரிவுகள் இனி நம் விரல் நுனியில்!
இரத்த உறவினர்களுக்கு வாடகை செலுத்துதல்:
வாடகைக்கு விடப்பட்ட வளாகம் விலக்கு கோரும் நபருக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடாது. பெற்றோருடன் தங்கி அவர்களுக்கு வாடகை செலுத்தினால், HRA இன் கீழ் வரிவிலக்கு பெறலாம். இருப்பினும், குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அதை காட்ட முடியும். உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையே உங்கள் வாடகை தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்பதற்கான சான்றுகள் முக்கியம்.
HRA பெறாத தனிநபர்கள்:
சம்பளத்தில் HRA கூறு இல்லாத சில ஊழியர்கள், வாடகை செலுத்தி இருக்கலாம். அவர்களுக்கு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 (GG) கீழ் படிவம் 10B ஐ சமர்ப்பித்து விலக்கு பெறலாம். மாதம் அதிகபட்சம் ரூ.5000 வரை கணக்கில் கழித்துக்கொள்ளப்படும்.
வரி விலக்கு கோரும் போது, தனிநபர் அல்லது அவரது/அவரது மனைவி அல்லது மைனர் குழந்தை அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பத்தின் (HUF) உறுப்பினராக எந்தவொரு தங்குமிடமும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், தனிநபருக்கு ஏதேனும் ஒரு இடத்தில் குடியிருப்புச் சொத்து இருந்தால், அதிலிருந்து வாடகைக்கு வருமானம் ஈட்டினால், எந்தக் கழிவும் அனுமதிக்கப்படாது. சொந்த வீட்டில் இல்லாமல் வேறு நகரத்தில் வந்தால் விலக்கு கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Rent, Rental Agreement, Rented house