ஹோம் /நியூஸ் /வணிகம் /

HP நிறுவனத்தில் 6000 நபர்கள் வேலை இழக்கும் அபாயம் - இது தான் காரணமாம்!

HP நிறுவனத்தில் 6000 நபர்கள் வேலை இழக்கும் அபாயம் - இது தான் காரணமாம்!

எச்.பி

எச்.பி

உலகளவில் PCக்களை டெலிவரி செய்வது என்பது இந்த மூன்றாம் காலாண்டில் 20% குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் ஐ டி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி வருகின்றன. இதில் சமீபத்தில் கூகுள் இணைந்துள்ளது. இன்னும் எத்தனை ஆயிரம் நபர்களுக்கு வேலை பறிபோகப் போகிறது என்று நினைக்கும் போதே ஒரு பக்கம் அச்சமாக இருந்தாலும், ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் தான் ஆபத்தா அல்லது வேறு துறைகளும் பாதிக்கப்படுகிறதா என்பதை பற்றி பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எச்பி நிறுவனம் 6000 நபர்களை வேலையிலிருந்து நீக்க இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி பர்சனல் கம்ப்யூட்டர் பிராண்டுகளில் ஹெச்பி நிறுவனமும் ஒன்று! தனிப்பட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், பெரு வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் என்று HP பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஹெச்பி பலரின் விருப்பமான ப்ராடெக்ட்டாக இருந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக HP கம்பியூட்டருக்கான டிமாண்ட் குறைந்து வந்துள்ளது. இதனால் லாபம் குறைவதால், ஆராயிரம் வேலைகளை நீக்க இருப்பதாக HP நிறுவனம் தெரிவித்துள்ளது.

சராசரியாக எச்பி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை $3.61 என்று கணிக்கப்பட்டன. அதேபோல கேஷ்ஃபுளோவும் $3.25 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இவை இரண்டுமே எதிர்பார்த்த அளவை விட குறைவாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த கணிப்பின்படி நடப்பாண்டில் 10% அளவுக்கு கம்ப்யூட்டர் விற்பனை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் மார்க்கெட்டிங் மிகவும் சவாலாக மாறியுள்ளது என்றும் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கம்ப்யூட்டர் விற்பனை செய்வதன் மூலமாகத்தான் HP பெரும்பாலும் வருமானம் ஈட்டுகிறது. ஆனால் நீண்ட காலமாகவே PCக்கான டிமாண்ட் குறைந்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

Also Read : குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விருப்பமா? நல்ல லாம் தரும் டாப் 5 திட்டங்கள்

குறைவான விலையில் நுகர்வோர் பொருட்கள் கிடைப்பது முதல் காரணம் நிறுவனங்களும் தங்களுடைய பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதால், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கான PC தேவை எண்ணிக்கை குறைகிறது. அதில் எச்பி நிறுவனமும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது இரண்டாம் காரணமாக அமைந்துள்ளது

உலகளவில் PCக்களை டெலிவரி செய்வது என்பது இந்த மூன்றாம் காலாண்டில் 20% குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஹெச்பி நிறுவனம் மட்டுமல்லாமல், டெல் நிறுவனமும், தந்து 55 சதவிகித வருமானத்தை பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையில் இருந்துதான் பெறுகிறது. ஆனால், HP போலவே, இந்த காலாண்டில் டெல் லேப்டாப் விற்பனை என்பதே உறைந்து போயிருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விற்பனை குறைந்துள்ள நிலையில், லேப்டாப்புக்கான டிமாண்டும் தற்பொழுது சரிந்து வருகிறது. எனவே செலவுகளை கட்டுப்படுத்த எச்பி தன்னுடைய வொர்க்ஃபோர்ஸிலிருந்து 10 சதவிகிதத்தை குறைக்க போவதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலுமே ஹெச்பி நிறுவனத்தில் 61000 நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 10 சதவிகிதம், அதாவது 6000 நபர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலையிலிருந்து நீக்கப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது நிறுவனத்தை முழுவதுமாக மறு சீரமைப்பு செய்ய இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டுக்குள் எச்பி நிறுவனம் 1.4 பில்லியன் டாலர்களை சேமிக்க முடியும் என்று அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Published by:Vijay R
First published:

Tags: HP, Job