ஹோம் /நியூஸ் /வணிகம் /

2022 ஆம் ஆண்டில் கூடுதல் வருமானம் பெற உங்கள் முதலீட்டை எவ்வாறு பல்வகைப்படுத்தலாம்?

2022 ஆம் ஆண்டில் கூடுதல் வருமானம் பெற உங்கள் முதலீட்டை எவ்வாறு பல்வகைப்படுத்தலாம்?

காட்சி படம்

காட்சி படம்

2022 ஆம் ஆண்டில் கூடுதல் வருமானம் பெற உங்கள் முதலீட்டை எவ்வாறு பல்வகைப்படுத்தலாம் என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  அதிக வருமானம் அதிக நிதி பாதுகாப்பிற்குச் சமம். நமது சம்பள வருமானத்தைத் தவிர, அதிகரித்து வரும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வசதியாக வாழ்வதற்கும் நமக்கு கூடுதல் வருமான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

  இன்று ஒருவரின் ரிஸ்க் புரொஃபைல், வயது வகை, முதலீட்டு இலக்குகள் போன்றவற்றின் அடிப்படையில் ஏராளமான முதலீட்டுத் தேர்வுகள் கிடைக்கின்றன. உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமான வழிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

  வெவ்வேறு முதலீட்டு வழிகளைக் கொண்ட ஒரு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவானது சந்தை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் வெவ்வேறு முதலீட்டு கருவிகளின் நன்மைகளைப் பெறவும் உதவுகிறது. இந்த முதலீட்டு முறைகளிலிருந்து திரட்டப்படும் கார்பஸ் தொகையானது, அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்பாராதச் செலவினங்கள் ஏற்படும்போது கைகொடுக்கிறது.கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்கான சில பிரபலமான வழிகளை இங்கே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

  • மியூச்சுவல் ஃபண்டுகள்

  மியூச்சுவல் ஃபண்டு என்பது பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதிகளை ஒருங்கிணைத்து, பங்குகள், பத்திரங்கள், பணச் சந்தைப் பத்திரங்கள் போன்ற பல்வேறு நிதிச் சொத்துக்களில் முதலீடு செய்யும் ஒரு நிதிக் கருவியாகும். பல்வேறு துறைகளில் உள்ள பலதரப்பட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதன் மூலம் முறையற்ற ஆபத்துகளைப் பல்வகைப்படுத்த இது உதவுகிறது. உங்கள் முதலீட்டு நோக்கம் மற்றும் இடர் விருப்பத்தைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

  இந்தியப் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் முதலீட்டாளர்களின் பங்குகள் மற்றும் நம்பிக்கையின் காரணமாக, மியூச்சுவல் ஃபண்டு முதலீடு முதலீட்டாளர்களிடையே குறிப்பிடத்தக்க அளவில் பிரபலமடைந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் காலப்போக்கில் அதிக வருமானத்தை வழங்குவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளன, எனவே இவை நீண்ட கால செல்வத்தை உருவாக்க உதவுகின்றன.

  • தங்கம்

  தங்கம் என்பது ஒரு தனித்துவமான சொத்து வகுப்பாகும். தங்கத்தில் 10 முதல் 15 சதவீதம் வரையிலான போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடானது ஒரு பல்வகைப்படுத்தியாகவும், மற்றும் ஈக்விட்டி, பத்திரங்கள் போன்றவற்றைப் பாதிக்கும் நிச்சயமற்ற சந்தைச் சுழற்சிகளின் போது ஏற்படும் இழப்புகளைத் தணிக்கும் ஒரு வாகனமாகவும் செயல்படுகிறது. மேலும், மற்ற பெரிய நிதி சொத்துகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தில் முதலீடு செய்வது போட்டித்தன்மை வாய்ந்த வருமானத்தை வழங்குகிறது. எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தைச் சேர்ப்பது உங்கள் இடர்-சரிசெய்யப்பட்ட வருவாயை அதிகரிப்பதில் உங்களுக்கு உதவும்.தங்கத்தைப் பொருளாக வாங்குவதற்குப் பதில், சாவரின் தங்கப் பத்திரங்கள், தங்க ETFகள், தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் டிஜிட்டல் தங்கம் ஆகியவற்றின் மூலமாகவும் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

  • நிலையான வைப்புத்தொகைகள்

  நிலையான வைப்புத்தொகைகள் என்பவை வங்கிகள் மூலம் வழங்கப்படும் பழமையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு கருவிகளாகும். சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு இருப்புகளுக்கு வழங்கப்படும் வட்டியுடன் ஒப்பிடும்போது இது அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஆபத்தற்ற நிலை மற்றும் நிலையான உத்தரவாத வருமானம் ஆகியவற்றின் காரணமாக, பலர் நிலையான வைப்புகளில் முதலீடு செய்யத் தேர்வு செய்கிறார்கள். மேலும், இது பலருக்கு நிலையான வருமான ஆதாரமாகச் செயல்படுகிறது.

  உங்கள் முதலீட்டு இலக்குகளைப் பொறுத்து 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • டிரேடிங்

  சந்தையில் கிடைக்கும் பல்வேறு நிதிக் கருவிகளுக்கு மத்தியில், கூடுதல் வருமானம் பெறுவதற்கான ஒரு பிரபலமான வழியாக டிரேடிங் உருவாகி வருகிறது.

  பல ஆன்லைன் டிரேடிங் பிளாட்ஃபார்ம்களின் உதவியுடன், இன்றைய காலங்களில் டிரேடிங் செயல்முறை மிகவும் வசதியானதாகவும், தொந்தரவு இல்லாததாகவும் மாறிவிட்டது. இந்த வலுவான பிளாட்ஃபார்ம்கள் பல தனிநபர்களுக்கு ஈக்விட்டிகள், கமாடிட்டிகள், நிதி குறியீடுகள் மற்றும் கரன்சி ஜோடிகள் உட்பட பல்வேறு நிதி சொத்துக்களில் டிரேடிங் செய்வதற்கான வசதியைப் பெற்றுத் தந்துள்ளன.

  சந்தையில் மகத்தான அங்கீகாரத்தைப் பெற்ற பிரபலமான டிரேடிங் தளங்களில் ஒன்று Binomo ஆகும். 133 நாடுகளில் கிடைக்கும் Binomo, டிரேடிங் செய்வதற்காக 73 அதிக மகசூல் தரும் சொத்துக்களை வழங்குகிறது. இது துல்லியமான முன் கணிப்பு என்று அறியப்படும் ஃபிக்ஸ்டு டைம் டிரேடிங் (FTT) அடிப்படையில் செயல்படுகிறது. இங்கே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சொத்துக்களின் இயக்கத்தை கணிக்க வேண்டும், அதாவது, ஒரு சொத்தின் விலை உயருமா அல்லது குறையுமா என்பதை. எனவே, உங்கள் முன் கணிப்பின் அடிப்படையில் நீங்கள் கூடுதல் வருமானம் பெறலாம்.

  இது பின்வருமாறு செயல்படும், நீங்கள் டிரேடிங் செய்ய விரும்பும் சொத்தில் முதலில் பூஜ்ஜியத்தை இட வேண்டும், பின்னர் டிரேடிங்கிற்கான முதலீட்டுத் தொகை மற்றும் நேரத்தை அமைக்க வேண்டும். இப்போது, ​​டிரேடிங்கிற்கான உங்கள் முன் கணிப்பு சரியாக இருந்தால், நீங்கள் கூடுதல் வருமானத்தைப் பெறலாம் மற்றும் உங்கள் கணிப்பு தவறாக இருந்தால், முதலீட்டுத் தொகை உங்கள் இருப்பிலிருந்து வித்ட்ரா செய்யப்படும்.

  Binomo என்பது ஒரு பாதுகாப்பான டிரேடிங் பிளாட்ஃபார்ம் மற்றும் சர்வதேச நிதி ஆணையத்தின் "A" வகை உறுப்பினர். இது நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு உறுதியையும் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் உறவுகளின் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதத்தையும் அளிக்கிறது. இது Verify my Trade மூலம் சான்றளிக்கப்பட்டது மற்றும் உலகளாவிய நிதி மற்றும் சந்தைகளில் சிறந்து விளங்குவதற்காக 2015 FE விருது மற்றும் 2016 IAIR விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும், உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தரவு அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, இந்த பிளாட்ஃபார்ம் ஆனது SSL குறியாக்க அடிப்படையிலான இணைய பாதுகாப்பு நெறிமுறையைப் பயன்படுத்துகிறது.

  Binomo பிளாட்ஃபார்ம் ஆனது பயனர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கநிலையாளர்கள் கூட ஒரு டெமோ கணக்கு மூலம் டிரேடிங் பற்றிய தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த பிளாட்ஃபார்மை பயன்படுத்தலாம். மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் டிரேடிங் செயல்திறனைக் கண்காணிக்க இது உங்களை அனுமதிக்கிறது.

  Binomoவில் உங்கள் டிரேடிங் பயணத்தைத் தொடங்க, அதன் இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது Google Play Store அல்லது Apple App Storeயிலிருந்து அதன் செயலியைப் பதிவிறக்கவும். 'பதிவுசெய்' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணக்கை உருவாக்கவும். உங்கள் பதிவுச் செயல்முறை முடிந்ததும், Binomo மூலம் ஆன்லைனில் முதலீடு செய்யும் 20 மில்லியனுக்கும் அதிகமான Binomists சமூகத்தின் ஒரு பகுதியாக நீங்கள் மாறுவீர்கள்.

  குறிப்பு: OTC நிதிக் கருவிகளுடனான செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க ஆபத்துகளைக் கொண்டுள்ளன, எனவே முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதித் திறன்களைப் பகுப்பாய்வு செய்யுங்கள்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Investment, MUTUAL FUNDS