Home /News /business /

EPF கணக்கிலிருந்து உங்கள் பணத்தை ஆன்லைனில் எளிதாக எடுப்பது எப்படி?

EPF கணக்கிலிருந்து உங்கள் பணத்தை ஆன்லைனில் எளிதாக எடுப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

EPF கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தை எடுத்து கொள்ள ஆன்லைன் மூலம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நடைமுறையை துவங்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
பல மாதங்களுக்கு பிறகு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தீயாய் பரவி பேரழிவு ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி பலரும் நிம்மதியை இழந்துள்ளனர். திடீரென எதிர்பாராமல் பரவி வரும் உருமாறிய கொரோனா மக்களை வீடுகளுக்குள் முடங்க செய்துள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கால் பலரும் தங்களது வேலைகளுக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி வாடி வருகின்றனர். பலரது குடும்ப பொருளாதாரம் கடந்த ஆண்டை போலவே மீண்டும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் கோவிட் -19 இரண்டாம் அலை பலருக்கு தூக்கமில்லாத இரவுகளை அளித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலிலும் அடிப்படை தேவைகளுக்காக ஏற்பட்டுள்ள பண நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பது அவர்களின் ஊதியத்தில் மாதாமாதம் பிடிக்கப்பட்டு வரும் இபிஎஃப் (EPF) தொகையாகும்.

கோவிட் -19 காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது EPF கணக்கிலிருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்த அறிவிப்பின் படி பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க உங்கள் EPF கணக்கிலிருக்கும் தொகையின் ஒரு பகுதியை நீங்கள் திரும்ப பெறலாம்.

1952 EPF திட்டம் தொற்று நோய்களின் போது அதன் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே பணத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. அரசு அறிவித்துள்ளபடி, ஒரு நபர் அதன் EPF பேலன்ஸிலிருந்து தனது மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி (dearness allowance- டிஏ) உள்ளிட்ட இரண்டையும் சேர்த்தோ அல்லது உங்கள் EPF கணக்கில் உள்ள நிலுவை தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவான தொகை வருகிறதோ அதை எடுத்து கொள்ளலாம்.

இந்த தொகையை எடுக்கும் ஒரு நபர் தான் திரும்ப பெற்ற பணத்தை மீண்டும் தன் EPF கணக்கில் மீண்டும் டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.

EPFO இணையதளத்தில் உங்கள் login-ஐ பயன்படுத்தி இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை நீங்கள் உருவாக்க முடியும்.

இனி உங்கள் EPF கணக்கிலிருந்து எவ்வாறு பணத்தை எடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் EPFO அலுவலகத்தால் யுனிவர்ஸல் அக்கவுண்ட் நம்பர் (UAN) என்பது வழங்கப்பட்டிருக்கும்.

Also Read : தமிழகத்தில் வங்கி சேவை தொடரும் என அறிவிப்பு

இந்த இக்கட்டான நேரத்தில் பணத்தை திரும்ப பெற நினைக்கும் ஊழியர்கள் EPFO வழங்கிய தங்களது யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) பயன்படுத்த வேண்டும்.

இந்த செயல்முறையை துவங்குவதற்கு முன்னதாக உங்கள் ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு உங்களது UAN-உடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாக பணத்தை திரும்ப எடுக்க விரும்பும் நபர், தனது EPF கணக்கிலிருந்து முன்கூட்டியே பணத்தை எடுத்து கொள்ள அனுமதி கேட்டு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நடைமுறையை துவங்கலாம்.

தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது நல்லது.

1.  உங்களது UAN நம்பரை பயன்படுத்தி login செய்து கொள்ளுங்கள்.

2. பின்னர் EPF வெப்சைட்டில் ஆன்லைன் சர்வீஸ் செக்ஷன் (Online Services section) கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் Form-31, 19, and 10C என்ற உரிமை கோரலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

3. அதன் பின்னர் உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன் தோன்றும். அதில் உங்கள் வங்கி கணக்கின் கடைசி 4 இலக்கங்கள் கேட்கப்படும். அதை டைப் செய்து க்க்ளிக் செய்த பின்  திரையில் ஒரு பாப்-அப் தோன்றும், அதில் இந்த கணக்குதானா என்பதை உறுதி செய்யும்படி ('Certificate of undertaking'.) கேட்கும். அதை ஓகே கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4. சரிபார்த்த பின், உங்கள் ஆன்லைன் க்ளைமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள். கீழே நீங்கள் காணும் மெனுவிலிருந்து PF advance படிவம் 31-ஐ தேர்வு செய்ய வேண்டும். என்ன காரணத்திற்காக பணம் எடுக்கிறீர்கள் என்பதற்கான காரணங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் Outbreak of pandemic (COVID-19) என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

5. முதலில் நாம் சொன்ன விதிகளின் படி உங்களுக்கு எவ்வளவு தொகை தேவையோ அதை பதிவிட்டு கொள்ளுங்கள். பின் உங்கள் வங்கியின் நிரப்படாத அதே சமயம் உங்கள் வங்கி கணக்கு எண் அடங்கிய செக்கை ஸ்கேன் செய்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் அப்லோட் செய்து கொள்ளுங்கள்.

6. உங்கள் முகவரியை உறுதி செய்யுங்கள்.

7. பின் ஆதார் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு SMS வழியே அனுப்பப்படும் OTP-ஐ அதில் பதிவு செய்ய வேண்டும். OTP சமர்ப்பிக்கப்பட்ட பிறகு உங்களது ஆன்லைன் க்ளைம் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்று கொள்ளப்படும் ஏற்று கொள்ளப்படும்.

பெருந்தொற்றை சமாளிக்க அனைவரும் போராடி வருவதால் 1 வாரம் முதல் 10 நாட்களுக்குள் உங்கள் PF பணம் உங்களுக்கு கிடைக்குமாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vijay R
First published:

Tags: Covid-19, EPF

அடுத்த செய்தி