Home /News /business /

பிரதமர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 பெற பதிவு செய்து பலன் பெறுவது எப்படி?

பிரதமர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 பெற பதிவு செய்து பலன் பெறுவது எப்படி?

 மாதிரி படம்

மாதிரி படம்

பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் சேருவது எப்படி, எப்படி பலன் அடைய முடியும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

    மத்திய அரசு செயல்படுத்தி வரும், பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் நாட்டில் விவசாய நிலம் கொண்ட அனைத்து குடும்பங்களும் பலன் பெற முடியும். வீட்டுத் தேவைகளை எதிர்கொள்ளவும் அல்லது விவசாயத்திற்கு தேவையான சில இடுபொருட்களை வாங்கி கொள்ளவும் இந்த தொகை உதவிகரமாக இருக்கும்.

    இந்த திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த அனைத்து விவசாய பயனாளிகளுக்கும் நிதியுதவி வழங்குவதற்கான பொறுப்புகள் அனைத்தையும் இந்திய அரசே ஏற்று கொள்கிறது. ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

    பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்டத்தில் சேருவது எப்படி, எப்படி பலன் அடைய முடியும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

    உங்கள் பெயரை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

    1. முதலில் http://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் Farmers Corner என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
    2. இப்போது New Farmer Registration என்ற லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
    3. நீங்கள் கிராமப்புற விவசாயியா அல்லது நகர்ப்புற விவசாயியா என்பதை தேர்வு செய்யவும்.
    4. ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து, Get OTP என்பதன் மீது கிளிக் செய்யவும்.
    5. உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்து சேர்ந்த ஓடிபி எண்-ஐ குறிப்பிட்டு, அடுத்தகட்டத்திற்கு செல்லவும்.
    6. இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், வங்கி விவரங்கள், தனி விவரங்கள் ஆகியவற்றை ஆதார் அட்டையில் உள்ளபடி குறிப்பிடுங்கள். ஆதார் ஆதண்டிகேஷன் என்று சமர்ப்பிக்கவும்.
    7. ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் நில ஆவண 6. விவரங்கள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
    8. நீங்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டதற்கு அல்லது நிராகரிக்கப்பட்டதற்கான செய்தி வந்து சேரும்.

    Also Read : 25 ஆண்டுகளில் 54 லட்சம் கிடைக்கும்.. எல்ஐசி தரும் இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க!

    திட்டத்தின் பலன்கள் என்ன?

    நிலம் கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படும். 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளாக இந்த பணம் உங்களுக்கு கிடைக்கும்.

    தவறான தகவல்களை கொடுத்தால் என்னவாகும்?

    தவறான தகவல்களை கொடுத்து, இந்த திட்டத்தில் நீங்கள் முறைகேடாக பதிவு செய்திருப்பது தெரியவந்தால், அடுத்ததாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் மீண்டும் பிடித்தம் செய்யப்படும்.

    வருமான வரி செலுத்துபவர் இந்த திட்டத்தில் இணைய முடியுமா?

    அது முடியாது. பயனாளியின் குடும்பத்தில் யார் ஒருவர் வருமான வரி செலுத்தியிருந்தாலும், அவர்கள் இந்தத் திட்டத்தில் பலன் அடைய முடியாது.

    இந்த திட்டத்தில் குடும்பம் என்பதன் வரையறை என்ன?

    ஒரு கணவர், மனைவி அவர்களது சிறுவயது பிள்ளைகள் ஆகியோர் ஒரு குடும்பம் ஆகும். இவர்களது பெயரில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் நிலம் இருந்தாலும் அவர்கள் பலன் அடைய முடியும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: PM Kisan, PM Narendra Modi

    அடுத்த செய்தி