முகப்பு /செய்தி /வணிகம் / தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த புகார்களை பதிவு செய்வது எப்படி?

தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த புகார்களை பதிவு செய்வது எப்படி?

கோப்புப் படம்

கோப்புப் படம்

சந்தாதாரர்கள் ஆன்லைன் குறை புகார் மேலாண்மை அமைப்பில் (சிஜிஎம்எஸ்) ஆன்லைன் புகாரை பதிவு செய்யலாம். புகார் அளிப்பதற்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) விவரங்களை நிரப்ப வேண்டும். PRAN விவரங்கள் நிரப்பப்படாவிட்டால், பிஓபி பதிவு விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஓய்வூதிய நிதி முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் கீழ் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம், சுருக்கமாக NPS எனப்படும் இத்திட்டம், செலவு குறைவானதாகவும், வரிச் சலுகைக்கு உட்பட்டதாகவுகம், எளிமையானதாகவும் உள்ளது. 

வேலை செய்வோர் மற்றும் வேலை கொடுப்போர் ஆகிய இருவரும் இத்திட்டத்திற்கான தொகையைச் செலுத்த வேண்டும். முதலீடுகளின் வளர்ச்சியைப் பொறுத்து இத்திட்டத்தின் ஆதாயம் அமைகிறது. அதனைப் போலவே, பங்களிப்பு அதிகமாக இருந்தால் முதலீடும் அதிகமாக இருக்கும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்) வளர்ந்து வரும் புகழ் பல நபர்களை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளது. விலக்கு-விலக்கு-விலக்கு என்ற கருவி முதலீட்டு சமூகத்தினரிடையே மிகவும் விரும்பப்பட்ட முதலீட்டு வடிவங்களில் இது ஒன்றாகும். 

மேலும், சந்தாதாரருக்கு உதவ தேசிய ஓய்வூதிய முறைமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்கள் மற்றும் குறைகளை பல முறைகள் மூலம் பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு வாடிக்கையாளர் அல்லது சந்தாதாரர் என்.பி.எஸ் புகார்களை பதிவு செய்ய மூன்று வழிமுறைகள் உள்ளன. அவை, ஆஃப்லைன் பயன்முறை, ஆன்லைன் பயன்முறை மற்றும் கால் சென்டர் மூலம் புகார் அளிக்கும் முறைகள் ஆகும்.

ஆஃப்லைன் பயன்முறை:

* சந்தாதாரர்கள் எழுத்துப்பூர்வ புகாரை பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ் (பிஓபி) - எஸ்.பி.க்கு அனுப்பலாம்.

* பிஓபி-எஸ்பி அந்த புகாரை மத்திய பதிவு வைத்தல் முகமை (சிஆர்ஏ) மற்றும் மத்திய குறை தீர்க்கும் முறைமைக்கு (சிஜிஎம்எஸ்) அனுப்பும்.

* புகார் பதிவு செய்யப்பட்டால் டோக்கன் எண் வழங்கப்படும். மேலும் அந்த எண் பிஓபி-எஸ்பிக்கு அனுப்பப்படும்.

* புகார் அளித்தவர் டோக்கன் எண்ணை பிஓபி-எஸ்பி-லிருந்து பெறலாம்.

ஆன்லைன் பயன்முறை

சந்தாதாரர்கள் ஆன்லைன் குறை புகார் மேலாண்மை அமைப்பில் (சிஜிஎம்எஸ்) ஆன்லைன் புகாரை பதிவு செய்யலாம். புகார் அளிப்பதற்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) விவரங்களை நிரப்ப வேண்டும். PRAN விவரங்கள் நிரப்பப்படாவிட்டால், பிஓபி பதிவு விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.

Also read... பொது வருங்கால வைப்பு நிதி (PPF) தொகைக்கான வட்டியை எவ்வாறு கணக்கிடுவது?

* https://www.npscra.nsdl.co.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் சந்தாதாரரின் கார்னர் என்ற ஆப்ஷனில் குறைகளை / விசாரணையை பதிவுசெய்க என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

* அதில் என்பிஸ் சந்தாதாரர் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

* ஒரு புதிய திரை தோன்றும். அதில் உள்ள தொடரவும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

* நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) விவரங்கள் மற்றும் POP விவரங்களை வழங்க வேண்டும்.

* அதன்பிறகு புகார்களை பதிவு செய்யலாம்.

* புகார்தாரர் குறை தீர்க்கும் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் துணை ஆவணங்களை ஆன்லைன் முறை வழியாக பதிவேற்ற வேண்டும். புகாரை வெற்றிகரமாக சமர்ப்பித்த பின், ஒரு டோக்கன் எண் திரையில் காண்பிக்கப்படும். இந்த எண்ணை புகார்தாரர் மேலும் குறிப்பிடுவதற்கும் எதிர்காலத்தில் புகாரைக் கண்காணிப்பதற்கும் கவனிக்க வேண்டும்.

கால் சென்டர் மூலம்  புகார் அளிக்கும் முறை:

1800222080 என்ற கட்டணமில்லா எண்ணை பயன்படுத்தி சி.ஆர்.ஏ கால் சென்டரை அழைப்பதன் மூலம் புகார் அளிக்க முடியும். சந்தாதாரர் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு NPS கணக்கைத் திறக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட T-PIN ஐக் கூறி அவரது அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும். புகாரை வெற்றிகரமாக பதிவுசெய்த பிறகு, மேலதிக குறிப்புகளுக்கு டோக்கன் எண் வழங்கப்படும்.

First published:

Tags: National Pension Scheme