ஹோம் /நியூஸ் /வணிகம் /

வெளிநாட்டிலிருந்து போஸ்ட் ஆபீஸ் மூலமாக பணம் பெறுவது எப்படி? 

வெளிநாட்டிலிருந்து போஸ்ட் ஆபீஸ் மூலமாக பணம் பெறுவது எப்படி? 

மாதிரி படம்

மாதிரி படம்

பணம் பெறுபவர் தபால் அலுவலகத்திற்குச் சென்று, பணத்தைப் பெறுவதற்கான படிவத்தை நிரப்பி, சரியான அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  பணப்பரிமாற்ற சேவைத் திட்டம் (MTSS) என்பது மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பணப் பரிமாற்றச் சேவையாகும். இந்த சேவை சுமார் 195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இந்தியாவிற்கு பணப்பரிமாற்ற செய்ய உதவுகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

  வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, வங்கி டூ வங்கிக்கு நேஷனல் எலக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர்ஸ், முகவர்கள் மூலமாக பரிவர்த்தனை என பலமுறைகள் உள்ளன. ஆனால் இணையதளம் பற்றியோ, வங்கி செயல்முறைகள் பற்றியோ அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் தபால் அலுவலகம் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  உலகம் முழுவதும் சர்வதேச பணப் பரிமாற்றச் சேவைகளை வழங்கி வரும், சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் பைனான்சியல் சர்வீசஸ் (Western Union Financial Services) உடன் இணைந்து இந்தியாவில் சர்வதேச பணப் பரிமாற்றச் சேவையை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது.

  இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களது குடும்பத்திற்கு அனுப்பும் பணத்தை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல் MTSS திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப முடியுமே தவிர, இந்தியாவில் இருந்து எந்த நாட்டிற்கும் பணம் அனுப்ப முடியாது.

  இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்டு, இந்திய அரசின் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படும், இந்த சர்வதேச பண பரிமாற்ற சேவை பாதுகாப்பானது, சட்டபூர்வமானது, வேகமானது மற்றும் நம்பகமானது ஆகும்.

  பிற நாட்டிலிருந்து பணத்தை பெறுவது எவ்வாறு?

  இந்தியாவிற்கு பணம் அனுப்ப விரும்பும் வெளிநாட்டை சேர்ந்த பணம் அனுப்புபவர், சேவை செயல்படும் நாடுகளில் உள்ள வெஸ்டர்ன் யூனியன் இருப்பிடங்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று, பணம் அனுப்புவதற்கான படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டிய தொகை மற்றும் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

  ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை அனுப்பப்பட்ட பிறகு, அனுப்புநருக்கு ஒரு தனிப்பட்ட பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் அல்லது ரெபரன்ஸ் நெம்பர் (Money Transfer Control Number/Reference Number) வழங்கப்படும். இந்த எண்ணை பணம் அனுப்பப்பட்டுள்ள நபருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  Read More: டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!

  பணம் பெறுபவர் தபால் அலுவலகத்திற்குச் சென்று, பணத்தைப் பெறுவதற்கான படிவத்தை நிரப்பி, சரியான அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும். பரிவர்த்தனை சரிபார்க்கப்பட்டவுடன், ரசீதுடன் பணமானது வழங்கப்படும். இந்த முழு செயல்முறைக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்

  முக்கிய தகவல்கள்:

  ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் வழிகாட்டுதலின் படி, ஒருவர் ஒரே நேரத்தில் 2800 டாலர்களை மட்டுமே அனுப்ப முடியும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து எந்தவிதமான கரன்சியாக அனுப்பப்பட்டாலும், அது பெறுநருக்கு இந்திய ரூபாயாகவே வழங்கப்படும்.

  ரூ.50 ஆயிரம் வரையில் மட்டுமே பணம் பெறுபவருக்கு ரொக்கமாக செலுத்தப்படும். 50 ஆயிரத்தை விட அதிகமாக அனுப்பிவைக்கப்பட்டால், அது பயனாளியின் பெயரில் காசோலையாக மட்டுமே வழங்கப்படும். இது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்துமே, பணம் பெறும் நபர் வெளிநாட்டு சுற்றுலா பயணியாக இருப்பின் அவர்களுக்கு மொத்த தொகையும் பணமாக வழங்கப்படும்.

  பணமோசடி அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் எல்லை தாண்டிய உள்நோக்கிய பணப் பரிமாற்ற முறையைத் தடுப்பதற்காக RBI வழங்கிய KYC / AML / CFT வழிகாட்டுதல்களை பரிமாற்றத்தின் போது பெறுநர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

  1. வாக்காளர் அடையாள அட்டை

  2. ஓட்டுநர் உரிமம்

  3. பான் கார்டு

  4. ரேஷன் கார்டு

  5. ஆதார் அட்டை என அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: India, Money, Post Office