ஹோம் /நியூஸ் /வணிகம் /

மக்களே உஷார்... இந்த 5 பொறிகளில் சிக்கினால் உழைத்த காசு மொத்தமும் போய்விடும்!

மக்களே உஷார்... இந்த 5 பொறிகளில் சிக்கினால் உழைத்த காசு மொத்தமும் போய்விடும்!

 மாதிரி படம்

மாதிரி படம்

பண மோசடியில் சிக்காமல் உங்கள் பணத்தைப் பத்திரமாக பாதுகாத்துக்கொள்வது அவசியமாயுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைச் சேமிப்பு மற்றும் முதலீடுகள் மூலமாக இரட்டிப்பாக்க எண்ணும் போது மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். ஓடி ஓடி உழைத்த காசை தவறான முதலீடுகள் அல்லது சேமிப்பு திட்டங்களில் செலுத்தி மோசம் போகாமல் இருக்க வேண்டும் என்றால், சம்பாதித்த பணத்தை மிகுந்த கவனத்துடன் நிர்வகிப்பது மிகவும் முக்கியம். இதற்கு முதலில் வீண் செலவுகளைக் குறைத்து பணத்தைச் சேமிக்கும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

என்ன தான் உங்களிடம் பணத்தைச் சேமிக்கவும், செலவுகளை சிக்கனப்படுத்தவும் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தாலும், பைனான்ஸ் மார்க்கெட்களில் உள்ள சில நிதி திட்டங்கள் உங்கள் பணத்தை மோசடி செய்ய வாய்ப்புள்ளது. எனவே பணத்தைச் சேமிக்க விரும்பும் நபர்கள் தப்பித் தவறிக்கூடச் சிக்கக்கூடாத 5 நிதி பொறிகள் பற்றி கீழே விளக்கியுள்ளோம்.

1. தேவை மற்றும் ஆசை:

மாதந்தோறும் பட்ஜெட்டை உருவாக்கும் போது, அந்த பட்டியலில் முதலில் தேவையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவைகள் என்பது உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவையான விஷயங்கள். தேவைகளின் கீழ் வரும் செலவுகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் தேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் ஒதுக்க வேண்டும்.

Also Read:வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விரைவில் முன்னேறும் - ஆர்பிஐ

உதாரணமாக, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வருமானத்தில் 10 சதவீதத்தைத் தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யலாம். அதில் ஒருநபர் சம்பாதிக்க ஆரம்பித்திருந்தால், அவர் தேவைகளுக்காகக் குறைந்த பட்ஜெட்டை அமைத்து, மீதமுள்ள தொகையைச் சேமிப்பிற்காக ஒதுக்கலாம்.

2. ஆங்கரிங்:

ஆங்கரிங் என்பது ஒரு பங்கிற்கு மதிப்பை அமைத்துப் பயன்படுத்தக்கூடியது ஆகும். இது நிதியியல் ஆய்வாளர் அல்லது முதலீட்டாளர் போன்ற நிதிச் சந்தைப் பங்கேற்பாளரை, மிகைப்படுத்தப்பட்ட முதலீட்டை வாங்குதல் அல்லது குறைவான மதிப்பிலான முதலீட்டை விற்பது போன்ற தவறான நிதி முடிவை எடுக்கலாம்.

உதாரணமாக ஒரு பொருளின் ஸ்டிக்கர் விலை ரூ.100 என்று இருந்தால், அதன் உண்மையான மதிப்பு 50 ரூபாயாக இருந்தாலும் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட விலையை வைத்து பொருளின் மதிப்பு அதிகம் என நினைத்துக் கொள்கிறார்கள்.

3. கிரெடிட் கார்டு:

ஆன்லை யுகத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது மிகவும் பயனுள்ளதாக மாறி வருகிறது. இது நிதியை நிர்வகிக்கவும், பொருட்களை வாங்கும் போது தள்ளுபடி மற்றும் இலவசங்களைப் பெறவும் உதவுகிறது. ஆனால் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால், நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம். சலுகை இருப்பதால் தேவையில்லாத பொருட்களை, கிரெடிட் கார்டு மூலம் வாங்கி குவிக்கிறோம். கிரெடிட் கார்டுகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் 20-40 சதவீதம் வட்டி உள்ளது, அதை நாம் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். எனவே கடன் தொகையை மனதில் கொண்டு கிரெடிட் கார்டை தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

Also Read:தங்கத்தை வைத்து கடன் வாங்கப் போகிறீர்களா? - இந்த ஆறு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

4. முதலீடாக மாறும் காப்பீடு:

நமக்கோ அல்லது நம் குடும்பத்தாருக்கோ ஏதேனும் திடீர் பிரச்சனை ஏற்பட்டால் நமக்கு உதவும் ஒன்றுதான் காப்பீடு. ஆனால் உங்கள் காப்பீடு உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. காப்பீடு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து சேமித்த பணத்தைச் சரியான முதலீடுகளில் முதலீடு செய்வதை உறுதி செய்யுங்கள்.

5. நகை முதலீடுகள்:

நகைகள் பெரும்பாலும் முதலீடாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது ஒரு நல்ல முதலீடு அல்ல. ஏனெனில் தனி நபரால் அணியப்படும் தங்க நகைகள் தேய்மானம் மற்றும் சேதாரம் காரணமாகக் குறைந்த மதிப்பைப் பெறுகின்றன. எனவே, நகைகளை வைத்திருப்பதை விட அரசின் பேப்பர் கோல்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இவை நல்ல வருமானம் தரக்கூடியவை ஆகும்.

First published:

Tags: Bank fraud, Cyber fraud, Investment, Money, Online Frauds