ஹோம் /நியூஸ் /வணிகம் /

நெருங்கும் அப்ரைசல் நேரம்: உங்களைத் தயார்படுத்திக் கொள்வது எப்படி?

நெருங்கும் அப்ரைசல் நேரம்: உங்களைத் தயார்படுத்திக் கொள்வது எப்படி?

கரியர் : திருமணத்திற்குப் பின் குடும்பம் என்றாகிவிட்டால் நீங்கள் நேசிக்கும் வேலையை சிறப்பாக செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே வேலையில் அடைய நினைக்கும் உயரங்களை அடைந்தபின், அதில் நீங்கள் திருப்தி அடைந்த பின் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதற்காக 30 கடந்தும் திருமணத்தை தள்ளி போடாதீர்கள்.

உங்கள் பட்ஜெட்டை நிதர்சனத்துக்கு ஏற்றவாறு நிர்ணயித்த்துக் கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நிதியாண்டு நிறைவு பெறும் வேளையில் ஒவ்வொரு பணியாளருக்கும் ஊதிய உயர்வு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  இந்த சூழலில் கொரோனா வைரஸ் தாக்கம், வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல், பொருளாதார வீழ்ச்சி ஆகியன உங்கள் ஊதிய உயர்வை பாதிக்குமா? என்றால் ஆம் என்பதைத்தான் விடையாகக் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

  காரணம், உலகையே கொரோனா முடக்கியுள்ள நிலையில் பல துறைகளில் மார்ச் மாதத்துக்கான ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் நிச்சயம் மாத சம்பளம் வாங்குவோர் ஊதிய உயர்வு மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருக்க வேண்டாம் என்றே ஆலோசனை அளிக்கின்றனர் வல்லுநர்கள்.

  நிதி நெருக்கடி காரணமாக நிறுவனங்களும் சந்தை வர்த்தகமும் திக்குமுக்காடி வருகின்றன. இருந்தாலும், உங்கள் வேளையில் தொய்வடையாதீர்கள். அது வருங்காலத்தையே பாதிக்கும். பொருளாதார வல்லுநர்கள் கணக்கின் அடிப்படையில் ஊதிய உயர்வு என்பது கடந்த ஆண்டைவிட 9.3 சதவிகிதமும் குறையும்.

  இதனால், உங்கள் பட்ஜெட்டை நிதர்சனத்துக்கு ஏற்றவாறு நிர்ணயித்த்துக் கொள்ளுங்கள். நிதி சார்ந்த முதலீடுகளை சரியான முறையில் அதிகரிக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை முதலீடாக்குங்கள். உங்கள் குடும்ப மாத பட்ஜெட் தொகையைக் கணக்கிட்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவைப்படும் ஒரு தொகை நிச்சயம் உங்களது சேமிப்பில் இருக்கட்டும்.

  மேலும் பார்க்க: 2019-20 நிதியாண்டில் மட்டும் 893 இடங்களில் வேட்டை... ஐடி ரெய்டுகளில் சிக்கியது எவ்வளவு?

  Published by:Rahini M
  First published:

  Tags: Personal Finance