நாட்டின் செலவீனங்களை கவனிக்க ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்ய படுகிறது. அவ்வளவு பெரிய நாட்டை ஆள பட்ஜெட் தேவைப்படும் பொழுது நம் வீட்டு கணக்கிற்கு அது எவ்வளவு முக்கியம்.
நம் நாட்டில் மாத சம்பளம் வாங்கி அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம். அப்படி மாத சம்பளத்தில் வாழ்பவர்களுக்கு பட்ஜெட்டின் முக்கியத்துவம் தெரியும்.
எளிமையாக வீட்டு பட்ஜெட் போடும் வழியை சொல்கிறோம். மாதத்தின் முதல் நாள் அமர்ந்து ஒரு நோட்டு பேனா வைத்துத் தொடங்குங்கள்.
3 ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் தரும் ஹைபிரிட் முதலீடு!
வரவு எட்டணா..
முதலில் அந்த வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறார்களோ அவர்களது வருமான நிலையை கருத்தில் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு மாத சம்பளம் இருக்கும். ஒரு சிலர் பிரீலான்சராக இருப்பார்கள். அவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் உண்டு. அப்படி யார் யாருக்கு எவ்வளவு பணம் வர இருக்கிறது என்பதை முதலில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து செலவுகளை பட்டியலிடுங்கள்.
அத்தியாவசிய செலவு
வீட்டில் வாங்கும், பால், மளிகை, மருந்துகள், தண்ணீர், காய்கறி செலவுகளை குறைக்க முடியாது. போன மாதம் இவற்றில் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு ஆனது என்று கணக்கிட்டு கொள்ளுங்கள். இந்த மாத வருமானத்தில் இருந்து அதைக் கழித்துக்கொள்ளுங்கள்.
இந்த மாத தேவைகள்
ஒரு சில மாதங்களில் கல்வி கட்டணம், மின்சாரக்கட்டணம், வீட்டுவரி, பாலிசி சந்தா, வண்டி டியூ, போன் கட்டணம் என்று சில செலவுகள் வரும். அவற்றையும் பட்டியலிட்டு வருமான கணக்கில் கழித்துக்கொள்ளுங்கள்.
கடன் இருந்தால் அதற்கான மாத கட்டணம் எவ்வளவு என்று பார்த்து அதையும் கழிக்கவும்.
சேமிப்பு:
வீட்டில் குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கு என தனியாக ஒரு தொகையை பிரித்து வைத்து சேமிப்பு கணக்கில் போட்டுக்கொள்ளுங்கள். திடீர் மருத்துவ செலவுகளுக்கு பயன்படும்.
சேமிப்பு கணக்குகளுக்கான மாத சந்தாக்களை கணக்கிட்டு அதையும் கழிக்கவும்.
இப்படி கணக்குகளை பிரித்து எழுதிக்கொண்டால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்று தெரிந்து கொள்ளலாம். செலவுகள் போக கையில் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துவிடும்.
வரவு எட்டணா செலவு பத்தணா என்று ஆகாமல், செலவு ஆறணா என்று குறைக்க இந்த பட்டியல் தான் உதவும். இப்படி பட்டியலிடும் போது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதை தவிர்க்கலாம்.
அது போக மிச்சம் இருக்கும் பணம் தான் சேமிப்பிற்கானது. இதில் இடையில் உறவினர்கள் வருவது , படத்திற்கு போவது என்று நிகழும் போது இந்த தொகையில் இருந்து தான் எடுக்கவேண்டி வரும்.
இவற்றை எல்லாம் மாதத்தின் முதலிலேயே கணக்கிட்டால் தான் அந்த மாதத்தில் எப்படி செலவாகும். மாத கடைசி வரை பணத்தை எப்படி இட்டுச் செல்வது என்று புலப்படும்.
பணமாகக் கொடுத்தால் செலவை மிச்சப்படுத்தலாமா ?
கூடுதல் டிப்ஸ் : ஒரு சில மாதங்களில் சேமிப்பு போக கையில் பணம் இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் கையில் உள்ள பணத்தைக் கொண்டு கடனின் அசலை கட்ட முயலுங்கள். அப்போது வட்டியின் அளவும் குறையும். கடன் கட்டும் காலமும் குறையும்.
இதற்கு தற்போது பல செயலிகள் சந்தையில் உள்ளது. மணிபை, டே டு டே எக்ஸ்பென்ஸ், மை பட்ஜெட், வாலெட், பேமிலி பட்ஜெட் போன்ற செயலிகள் இதற்கு உதவும். பிரிவுகளாக பிரித்து பணத்தை உள்ளிட்டால் மிச்சம் இருக்கும் பணத்தை பட்ஜெட் போட உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Android Apps, Budget friendly, Loan, Salary