வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களை போலவே தபால் அலுவலகங்களும் பல்வேறு சிறு சேமிப்பு மற்றும் முதலீட்டு விருப்பங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது தபால் அலுவலக டைம் டெபாசிட் கணக்கு ஆகும். POTD அல்லது தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் கணக்கு என்றும் கூறப்படுகிறது. இந்த சேமிப்புத் திட்டம், தபால் அலுவலகம், இந்திய அரசாங்கம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தபால் அலுவலக டைம் டெபாசிட் கணக்கு நிதி வளத்தை பெருக்குவதற்கும், பணவீக்கத்தில் மீள்வதற்கும் ஒரு நிலையான வருமானத்தை உருவாக்குகிறது.
தபால் நிலைய கணக்குகளைப் பொறுத்தவரை ஏதேனும் கணக்கைத் திறப்பதற்கு, தபால் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கு உரிய படிவத்தை பெற்று, நேரில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தற்போது இவ்வகையான சேவைகள் அனைத்துமே ஆன்லைனில் வழங்கப்படுகிறது. நீங்கள் தபால் அலுவலக டைம் டெபாசிட் கணக்கை ஆன்லைனிலையே தொடங்கலாம். அதைப் பற்றிய விவரங்கள் இங்கே.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி:
* நீங்கள் தபால் அலுவலக டைம் டெப்பாசிட் கணக்கைத் திறக்க, உங்களிடம் நெட் பேங்கிங் வசதி உள்ள தபால் நிலைய சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும்.
தபால் அலுவலக டைம் டெபாசிட் கணக்கை நீங்கள் பின்வரும் வழிமுறைகள் மூலம் திறக்கலாம்.
* indiapost.gov.in என்ற இணையத்தளத்துக்கு சென்று, உங்கள் தபால் அலுவலக கணக்கின் பயனர் ஐடி/கடவுச்சொல்லை உள்ளிடவும்.
* பின்னர், 'உள்நுழை' (SIGNIN) என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு, OTP அனுப்பப்படும். உங்கள் மொபைலில் பெற்ற OTP ஐ உள்ளிட்ட பின்னர், 'உறுதிப்படுத்து' (Confirm) என்பதன் மீது கிளிக் செய்யவும்.
* லாகின் செய்த பிறகு, உங்கள் கணக்கின் டாஷ்போர்டு பக்கம் திறக்கும். அந்தப்பக்கத்தில், 'பொது சேவைகள்' (General services) என்பதைக் கிளிக் செய்து, பின்னர் 'சேவை கோரிக்கைகள்' (Service Requests) என்பதைக் கிளிக் செய்யவும்.
* 'சேவை கோரிக்கைகள்' (Service Requests) என்ற ஆப்ஷனின் கீழே தோன்றும் பட்டியலில் ‘புதிய கோரிக்கைகள்’ (New Requests) என்பதைத் தேர்வு செய்யவும்.
இதையும் படியுங்கள் : எஸ்பிஐ மூலமாக ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்தில் இணையலாம் - வழிமுறைகள் இதோ…
* 'புதிய கோரிக்கைகள்' (New Requests) என்ற விருப்பத்தின் கீழ், ‘டைம் டெப்பாசிட் – டைம் டெப்பாசிட் கணக்கைத் திறக்கவும்’ (TD Account - Open a TD Account) என்பதைக் கிளிக் செய்யவும்.
* இப்போது, உங்கள் திரையில் ஒரு ஆன்லைன் படிவம் தோன்றும். அதில், டெபாசிட் தொகை, டெபாசிட் காலம், கணக்கைத் திறக்கும் தேதி மற்றும் டெபிட் கணக்கு உள்ளிட்ட அனைத்துத் தேவையான விவரங்களை வழங்கி ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
* படிவத்தை நிரப்பிய பின்பு, 'ஆன்லைனில் சமர்ப்பி' (Submit Online) என்பதைக் கிளிக் செய்து உங்களின் கோரிக்கையை உறுதி செய்யுங்கள்.
* நீங்கள் ஆன்லைன் படிவத்தை சமர்ப்பித்தவுடன், உங்களுக்கு குறிப்பு ஐடியுடன் கூடிய ஒரு ரசீது கிடைக்கும்.
உங்கள் ஆன்லைன் ரசீதை நீங்கள் PDF வடிவத்தில் பதிவிறக்கலாம். பின்னர், உங்கள் சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் கணக்கு பற்றிய விவரங்களைப் பெறுவீர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.