ஒட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

அரசு மானிய திட்டங்கள் மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு கட்டாயம் தேவை.

அரசு மானிய திட்டங்கள் மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு கட்டாயம் தேவை.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆதார் கார்டு தனியார் சேவைகளுக்குக் கட்டாயமில்லை என்று கூறினாலும் அரசு சார்ந்த சேவைகளுக்கு முக்கியமான ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு மானிய திட்டங்கள் மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு கட்டாயம் தேவை.

எனவே ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் கார்டு எண்ணை இணைப்பது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

Step 1: உங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் சாலை போக்குவரத்து துறையின் இணையதளத்தை அணுகவும்.
Step 2: “Link Aadhaar” என்ற தெரிவை கிளிக் செய்யவும்,
Step 3: அடுத்து வரும் டிராப் டவுன் மெனுவை கிளிக் செய்து “Driving License” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
Step 4: இப்போது ஓட்டுநர் உரிமம் எண்ணை உள்ளிட்டு “Get Details” என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் ஒட்டுநர் உரிமத்தின் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.
Step 5: பின்னர் ஆதார் எண்ணை உள்ளிட கோரப்பட்டுள்ள தெரிவைத் தேர்வு செய்து விவரங்களை அளிக்க வேண்டும்.
Step 6: ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கட்டாயம் தேவை. ஆதார் எண் உள்ளிட்ட பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளிட்டு “Submit” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
Step 7: மேலே கூறிய படிகள் அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்யும் போது இணைப்பை உறுதி செய்யக்கூடிய எஸ்எம்எஸ் ஒன்று மின்னஞ்சலுக்கு வரும்.

குறிப்பு: அனைத்து மாநில போக்குவரத்துத் துறை இணையதளத்திலும் ஆதார் கார்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கக் கூடிய தெரிவுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: திரைப்பட பாணியில் புதையல் மோசடி
Published by:Tamilarasu J
First published: