Home /News /business /

ஸ்மார்ட்ஃபோன் கேமராவைப் பயன்படுத்தி போலியான PAN கார்டைக் கண்டறிவது எப்படி!

ஸ்மார்ட்ஃபோன் கேமராவைப் பயன்படுத்தி போலியான PAN கார்டைக் கண்டறிவது எப்படி!

பான் கார்டு

பான் கார்டு

ஒரு பான் கார்டு போலியா அல்லது உண்மையானதா என்பதை கண்டறிய உங்களுக்கு 12 மெகாபிக்சல் கேமரா உள்ள ஒரு ஸ்மார்டபோன் மட்டுமே தேவை. இதற்காக வருமான வரித்துறை தனித்துவமான ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

    QR கோடுகள் பல இடங்களில் ஒரு பொருள் உண்மையானதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் கருவியாக இருக்கிறது. இணையங்களில் போலி இணைப்புகள், போலி பேமெண்ட் செயலிகள், உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருகிறது. அதே போல, நிதி அல்லது தனி நபர் சம்பந்தப்பட்ட ஆஃப்லைன் பரிவர்த்தனைகளிலும் போலியான பான் கார்டுகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    வருமான வரித் தறை வழங்கும் PAN கார்டில் க்யூ ஆர் கோடு இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த கியூ ஆர் கோடு மூலம், உங்கள் PAN போலியானதா அல்லது உண்மையானதா என்பதை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம். ஒரு பான் கார்டு போலியா அல்லது உண்மையானதா என்பதை கண்டறிய உங்களுக்கு 12 மெகாபிக்சல் கேமரா உள்ள ஒரு ஸ்மார்டபோன் மட்டுமே தேவை. இதற்காக வருமான வரித்துறை தனித்துவமான ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

    போலி பான் கார்டுகளைக் கண்டறிவது எப்படி என்பது பற்றிய வழிமுறைகள் :

    உங்கள் ஸ்மார்ட்ஃபோனில், பிளே ஸ்டோருக்கு சென்று, ‘PAN QR Code Reader’ (பான் QR கோடு ரீடர்) என்று தேடவும். தேடல் ரிசல்ட்டாக பல ஆப்கள் பட்டியலில் காட்டப்படும். ‘NSDL e-Governance Infrastructure Limited’ என்ற டெவலப்பர் பெயர் காட்டும் ஆப்பை டவுன்லோடு செய்யவும்.

    பான் QR கோடு ரீடர் செயலியைப் பதிவிறக்கிய பிறகு, அதை திறக்கவும்.

    ALSO READ |  2022-ல் அறிமுகமாக உள்ள சிறந்த ப்ரீமியம் பைக்குகளின் லிஸ்ட் இதோ!

    ஆப் லோடு ஆவதற்கு சில நொடிகள் ஆகலாம். செயலி முழுதாக லோடு ஆன பிறகு, கேமரா வியூஃபைண்டரில் நீங்கள் பச்சை நிறத்தில் பிளஸ் போன்ற கிராஃபிக்கைக் காண்பீர்கள். அதாவது நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி கேமராவை அமைப்பது போல, ப்ளஸ் கிராஃபிக் மீது ஸ்மார்ட்ஃபோன் கேமராவின் ஃபோகஸ் இருக்க வேண்டும்.

    நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பும் PAN அட்டையை நோக்கி கேமராவை வைக்கவும். இந்த ப்ளஸ் வடிவ கிராகஃபிக் பான் கார்டின் QR கோடு நடுவில் இருப்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.

    அது மட்டுமின்றி, பான் கார்டின் QR கோடு கேமரா வியூஃபைண்டரில் தெளிவாகத் தெரியும் படி அமைக்க வேண்டும். இடையில் எவ்விதமான தடையோ அல்லது ஃபிளாஷோ தோன்றக்கூடாது. கேமராவில் இருந்து QR கோடு துல்லியமாகத் தெரிய வேண்டும்.

    ALSO READ |  இந்தியாவில் எங்களது ப்ரீ-ஓன்ட் கார் சேல்ஸ் இரட்டிப்பாகும்.! வோக்ஸ்வாகன் நிறுவனம் நம்பிக்கை

    உங்கள் கேமரா QR கோடை தெளிவாகப் பார்க்க முடிந்தால், உங்களுக்கு ஒரு beep ஒலி கேட்கும், மற்றும் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைப்ரேட் ஆகும். பின்னர், ஒரு வெள்ளைப் பின்னணியில் PAN கார்டின் விவரங்கள் தோன்றும். நீங்கள் ஸ்கேன் செய்த அசல் பான் கார்டின் விவரங்களும், உங்கள் கேமரா திரையில் தோன்றும் பான் கார்டின் விவரங்களும் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்கவும். பான் கார்டின் விவரங்கள் வேறுபட்டால், உங்கள் பான் கார்டு போலியானது.

    ஸ்கேன் செய்த பின் உங்கள் மொபைல் திரையில் வேறு பான் தகவல்கள் காட்டப்பட்டால், நீங்கள் உடனே புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Pan card

    அடுத்த செய்தி