ஹோம் /நியூஸ் /வணிகம் /

கூகுள் பேயில் அதிக கேஷ்பேக் பெற எளிமையான வழிகள் இதோ!

கூகுள் பேயில் அதிக கேஷ்பேக் பெற எளிமையான வழிகள் இதோ!

கூகுள் பே

கூகுள் பே

எப்போதும் ஒரே வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பினால் குறைந்த அளவு தான் கேஷ்பேக் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கிலிருந்து பணம் பரிமாற்றம் செய்யும் போது கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்கள் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மக்கள் இன்று பெரும்பாலும் கடைகளுக்கு செல்லும் போது வெறும் கையேடு தான் செல்கிறார்கள். 100 ரூபாய் பொருளானாலும் 1000 ரூபாய் பொருளானாலும் ‘கூகுள் பே பண்ணிடவா?’ என்பதுதான் பரிவர்த்தனை பாஷையாக மாறி விட்டது. கையில் காசு வைத்துக்கொள்ளும் பழக்கமே மறந்து விட்டது.

கூகுள் பே வந்த காலத்தில் எந்த பரிவர்த்தனை என்றாலும் அதற்கு ஒரு ஸ்க்ரேட்ச் கார்ட், அதில் ரிவார்டு என்று அள்ளி அள்ளி கொடுத்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தான் அதிகம் வருகிறது. இல்லையேல் கூப்பன்கள் வருகிறது.

இதற்கிடையில் எப்படி அதிக கேஷ்பேக் வாங்குவது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? இதோ சில எளிய டிப்ஸ் தருகிறோம் பாருங்கள்...

தனி தனி பேமென்ட் ஆப்சன் :

கூகுள் பேவில் பணம் பரிமாற்றம் செய்ய பல்வேறு திட்டங்கள் உள்ளன.  நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேறொரு செயலி அல்லது இணையதளத்தில் இருந்து பணம் செலுத்த மட்டும் கூகுள் பேவிற்கு வராமல், இந்த ஆப்பிலேயே ரீசார்ஜ் செய்யுங்கள்.

இதையும் படிங்க: கிரெடிட் கார்டு பேமெண்ட் டியூ தேதியை மறந்து விட்டீர்களா..? லேட் பேமென்ட்டிற்கான அபராதத்தை தவிர்க்க வழிகள்..!

அதேபோல் மின்சார பில் , கேஸ் பில்  என்று இதிலேயே கணக்கை இணைத்துக்கொண்டு பணம் செலுத்தினால் அந்த பரிவர்த்தனைக்கு கேஷ்பேக் வர வாய்ப்புகள் அதிகம். இப்படி கூகுள் பேவில் பணம் பரிமாற்றம் செய்ய உள்ள பல்வேறு திட்டங்களை முழுமையாக  பயன்படுத்துங்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள்

கூகுள் பே செயலியில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைக்க முடியும். எப்போதும் ஒரே வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பினால் குறைந்த அளவுதான் கேஷ்பேக் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கிலிருந்து பணம் பரிமாற்றம் செய்யும்போது கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்கள் கிடைக்கும்.

அதேபோல் பணம் யாருக்கு செலுத்துகிறோமோ அவர் வேறு வேறு கணக்குகள் வைத்திருந்தால் மாற்றி மாற்றி அனுப்பலாம். இதனால் ஒரே கணக்கிற்கு அனுப்புவது போல் இருக்காது இருவருக்கும் கேஷ்பேக் கிடைக்க வாய்ப்புண்டு.

இதையும் படிங்க:இனி வாட்ஸ்அப்பிலும் எல்ஐசி சேவைகளை பயன்படுத்த முடியும்..! முழு விவரம் இதோ!

குறைந்த தொகை பரிவர்த்தனை

மேலும் அதிக கேஷ்பேக் சலுகைகள் வேண்டும் என்றால், அதிக தொகை பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடாது. குறைந்த தொகை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அதிக கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படும்.

சேவை கட்டணங்கள்

எரிவாயு சிலிண்டர் கட்டணம், மின்சார கட்டணம் போன்றவற்றைக் கூகுள் பே மூலம் செலுத்தும்போது அதிக கேஷ்பேக்குகள் கிடைக்கும். இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவையும் இதில் அடங்கும்.

இப்படி சிறு சிறு ட்ரிக்குகள் பயன்படுத்தி செய்யும் பண பரிவர்த்தனைகளால் கேஷ்பேக் தொகை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். முயற்சி செய்து பாருங்களேன்..

First published:

Tags: Google