• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடன் பெறுவது எப்படி?

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடன் பெறுவது எப்படி?

ஆயுள் காப்பீட்டுத் திட்டம் எதிராகக் கடன்

ஆயுள் காப்பீட்டுத் திட்டம் எதிராகக் கடன்

ஆயுள் காப்பீடு எதிரான கடனை காபீட்டு நிறுவனகள் மட்டும் இல்லாமல் வங்கிகள் மற்றும் வங்கி அல்லா நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு மட்டும் இல்லாமல் அவற்றுக்கு எதிராக கடனும் வழங்குகின்றன.

    ஆயுள் காப்பீடுக்கு எதிராக காபீட்டு நிறுவனகள் மட்டும் இல்லாமல் வங்கிகள் மற்றும் வங்கி அல்லா நிதி நிறுவனங்களும் கடன்  வழங்குகின்றன.

    இந்தக் கடன் ஆயுள் காப்பீட்டு வகைகளான டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) மற்றும் யூலிப் (ULIP) திட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை. எண்டோவ்மெண்ட் ஆயுள் காப்பீட்டுத் (Endowment policy) திட்டங்களுக்கு மட்டும் கடன் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கடன் தொகை:


    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு எதிரான கடன் தொகை, பாலிசியின் வகை, சரண்டர் மதிப்பை வைத்து மாறும்.

    பொதுவாக 80 முதல் 90 சதவீத பாலிசி சரண்டர் மதிப்பை கடனாகப் பெற முடியும். சில காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்திய 50 சதவீத பிரீமியம் தொகையை மட்டுமே கடனாக வழங்குகின்றன.

    தேவையான ஆவணங்கள்:


    ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு எதிராக கடன் பெற, அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களிடம் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சேர்த்து பாலிசியின் அசல் பத்திரம், அடையாள ஆவணம், Canceled செக் ஒன்றையும் இணைக்க வேண்டியது கட்டாயம்.

    கட்டணம்:


    கடன் பெறும் போது காப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனங்கள், அதற்கான ப்ராசஸிங் கட்டணத்தை வசூலிக்கும். இந்தக் கட்டணம் நிறுவனங்கள் மற்றும் கடன் தொகையை பொருத்து மாறுபடும்.

    கவனிக்க வேண்டியவை:


    1. தனிநபர் கடன் (Personal Loan) திட்டங்களைவிடக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்.

    2. கடன் பெற்ற பிறகு சரியான நேரத்தில் அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனில் சரண்டர் மதிப்பைவிட வட்டி அதிகமாகும். சில நேரங்களில் பாலிசியை மொத்தமாக இழக்கும் நிலைக்கும் ஆளாகலாம். ஆயுள் காப்பீட்டுக்கு எதிராக கடன் வாங்க நினைப்பவர்கள், அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

    மேலும் பார்க்க: உர்ஜித் படேல் ராஜினாமாவும்... விமர்சனங்களும்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: