Home /News /business /

மாதந்தோறும் ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமா..? இதை செய்தால் போதும்

மாதந்தோறும் ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமா..? இதை செய்தால் போதும்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ரூ.50 ஆயிரம் வரிச் சலுகை பெற மக்கள் முன்னுரிமை காட்டும் அதே வேளையில், அந்தத் திட்டத்தை தவிர்க்க முனைகின்றனர்.

    பொதுமக்கள் பலர் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட, தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) என்பது மிக சிறப்பு வாய்ந்த திட்டம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ரூ.50,000 வரிச் சலுகை பெற மக்கள் முன்னுரிமை காட்டும் அதே வேளையில், அந்தத் திட்டத்தை தவிர்க்க முனைகின்றனர். ஏனென்றால் ஆனுய்டி திட்டத்தில் சேருவது கட்டாயம் மற்றும் ஆனுய்டி வருமானத்திற்கு வரி போன்றவையே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

    நீண்ட கால திட்டம்

    என்பிஎஸ் என்பது நீண்டகால திட்டம் மற்றும் அதில் பலன் கிடைக்க பல ஆண்டுகள் ஆகும் என்றாலும்கூட, ஓய்வுக் காலத்தில் வருமானம் பெறுவதற்கான சரியான பாதையை காட்டுவதாக இத்திட்டம் அமைந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் போல, என்பிஎஸ் திட்டத்தில் உத்தரவாதத் தொகை வழங்கப்படுவது கிடையாது. மாறாக, நீங்கள் எவ்வளவு பணம் சேமித்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து பலன்களை பெற்றுக் கொள்ள முடியும்.

    குறைந்தபட்ச 40 சதவீத ஆனுய்டேசன் விதி

    தற்போதைய விதிமுறைகளின்படி, என்பிஎஸ் சேமிப்புத் தொகையின் முதிர்வு காலத்தில் ஒருவர் முழுமையான தொகையை திரும்பப் பெற்றுவிட முடியாது. அதில் குறைந்தபட்சம் 40 சதவீத தொகையுடன் ஆனுய்டி திட்டத்தில் சேர வேண்டும். இதனால், ஓய்வு காலத்திற்கு பிறகும் கூட ஓய்வூதியம் கிடைக்கும்.



    எஞ்சியுள்ள 60 சதவீத என்பிஎஸ் சேமிப்புக்கு வரி எதுவும் கிடையாது. அதே சமயம், நீங்கள் விரும்பும் பட்சத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான (100 சதவீதம் வரையில்) தொகைக்கும் கூட ஆனுய்டி பர்சேஸ் செய்ய முடியும்.

    என்பிஎஸ் திட்டத்தின் கீழ் மாதம் 50 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்க செய்ய வேண்டியவை

    உங்களுக்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால், குறைந்தபட்ச 40 சதவீத ஆனுய்டி திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு என்பிஎஸ் திட்டத்தில் நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை கணக்கீடு செய்து கொள்ள வேண்டும்.

    Also Read : வருமான வரி செலுத்தும் போது ரூ. 10,000 வரிவிலக்கு வேண்டுமா.? அப்ப இதை செய்யுங்கள்.

    உதாரணத்திற்கு ஆனுய்டி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 சதவீத வட்டி தரப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 40 சதவீத என்பிஎஸ் சேமிப்பு பணத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், 6 சதவீத வட்டி அடிப்படையில் உங்கள் என்பிஎஸ் சேமிப்பு தொகையாக ரூ.2.5 கோடி இருக்க வேண்டும். இதில் 40 சதவீதம் அல்லது ரூ.1 கோடி கொண்டு ஆனுய்டி பர்சேஸ் செய்ய வேண்டும். இதனால், ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கிடைக்கும். அதாவது மாதம் ரூ.50 ஆயிரம் கிடைக்கும். அதே சமயம், எஞ்சியுள்ள ரூ.1.5 கோடி பணத்தை நீங்கள் வரி இல்லாமல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

    என்பிஎஸ் திட்டத்தில் ரூ.2.5 கோடி சேர்ப்பது எப்படி

    உதாரணத்திற்கு 25 வயதில் நீங்கள் என்பிஎஸ் திட்டத்தில் சேருகிறீர்கள் என்றால் அடுத்த 35 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரையில் செலுத்த வேண்டும். 35 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.23,000 வரை செலுத்த வேண்டும். 45 வயதில் இணைந்தால் மாதந்தோறும் 59 ஆயிரம் முதல் 65,000 வரை 15 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Business

    அடுத்த செய்தி