இறந்தவரின் பெயரில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? பான், ஆதார் கார்டை சரண்டர் செய்வது எப்படி?

இறந்தவரின் வருமான வரி தாக்கல், வங்கிக் கணக்கை மூடுதல், மற்றும் பிற நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் எல்லாம் முடித்த பிறகு பான் மற்றும் ஆதார் கார்டை சரண்டர் செய்ய வேண்டும்.

news18
Updated: January 14, 2019, 2:32 PM IST
இறந்தவரின் பெயரில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? பான், ஆதார் கார்டை சரண்டர் செய்வது எப்படி?
மாதிரிப் படம்
news18
Updated: January 14, 2019, 2:32 PM IST
ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய சொத்துக்களை மட்டுமல்லாமல், மேலும் பல முக்கியமானவற்றை சட்டப்பூர்வமாக வாரிசுதாரர்கள் பெயரில் மாற்ற வேண்டி இருக்கும். அதுமட்டுமல்லாமல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை சரண்டர் செய்வதும் முக்கியமான ஒன்று.

எனவே, இறந்தவர்களின் வருமான வரியை தாக்கல் செய்வது எப்படி? பான் மற்றும் ஆதார் கார்டை சரண்டர் செய்வது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

வருமான வரி தாக்கல்

ஒருவர் இறந்துவிட்டால் வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 159-ன் கீழ் இறந்தவரின் வருமான வரியை அவரது சட்டப்பூர்வமான வாரிசுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்.

நீங்கள் சட்டப்பூர்வமான வாரிசுதாரராக இருக்கும்போது இறந்தவரின் பிரதிநிதியாக உங்களை வருமான வரித் துறையில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பிரதிநிதிக்கான அனுமதி வழங்கப்பட்ட பிறகு இறந்தவரின் பெயரில் வருமான வரியை தாக்கல் செய்ய முடியும்.

ஒருவேளை இறந்தவர்களின் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றாலோ, வரி செலுத்த வேண்டி இருந்தாலோ வாரிசுதாரரிடம் அதைப் பெற வருமான வரித்துறைக்கு உரிமை உண்டு.

இறந்தவர்களின் பான் கார்டை சரண்டர் செய்வது எப்படி?


New PAN card rules from today. Check what has changed
பான் கார்டு


இறந்தவர்களின் பான் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்றால் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, எந்த எல்லைக்குள் வருகிறது என்று கண்டறிந்து அந்த மதிப்பீட்டு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது என்ன காரணத்திற்காக பான் கார்டை சமப்பிக்கிறீர்கள் என்ற காரணத்தையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மேலும் இறப்புச் சான்றிதழ் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இறந்தவர்களின் ஆதார் கார்டை சரண்டர் செய்வது எப்படி?


ஆதார் கார்டை இதுவரை சரண்டர் செய்வதற்கான வழிமுறை ஏதுமில்லை. ஆனால் கார்டின் பயோமெட்ரிக் விவரங்களை மட்டும் லாக் செய்ய முடியும். பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்துவிட்டால் இறந்தவரின் ஆதார் கார்டின் கீழ் எந்த ஒரு பரிவர்த்தனையையும் செய்ய முடியாது. இணையதள இணைப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் இருந்தால் மட்டும் போதும். ‘resident.uidai.gov.in/biometric-lock’ என்ற இணைப்பிற்குச் சென்று ஆதார் கார்டு பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்ய முடியும்.

இறந்தவரின் வருமான வரி தாக்கல், வங்கிக் கணக்கை மூடுதல், மற்றும் பிற நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் எல்லாம் முடித்த பிறகு பான் மற்றும் ஆதார் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் பார்க்க: எய்ம்ஸ்-க்கு உரிமை கொண்டாடும் பாஜக!
First published: January 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...