ஹோம் /நியூஸ் /வணிகம் /

Meesho App-ல் பணம் சம்பாதிப்பது எப்படி? இதோ எளிமையான வழிமுறைகள்!

Meesho App-ல் பணம் சம்பாதிப்பது எப்படி? இதோ எளிமையான வழிமுறைகள்!

meesho app

meesho app

உங்களுக்கு லாபம் எவ்வளவு வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் அம்சமும் இதில் உள்ளது. பேஸ்புக் நிறுவனரான மார்க் சூக்கர்பெர்க், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

IIT பட்டதாரிகளான விதிட் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பார்ன்வல் இணைந்து 2015 ஆம் ஆண்டு Meesho செயலியை துவக்கினர். ரீசெல்லிங் எனப்படும் பொருட்களை மறுவிற்பனை செய்வதற்கு ஏற்ற தளமாக உருவாக்கப்பட்ட இந்த செயலியில் யார் வேண்டுமானாலும் பிராண்டுகளின் பொருட்களை ரீ செல்லிங் செய்யலாம். குடும்பத் தலைவி முதல் படிக்கும் மாணவர்கள் வரை செல்போன்கள் மூலம் தங்களுக்கு உகந்த பொருளை தேர்ந்தெடுத்து விற்பனை செய்யலாம்.

உங்களுக்கு லாபம் எவ்வளவு வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் அம்சமும் இதில் உள்ளது. பேஸ்புக் நிறுவனரான மார்க் சூக்கர்பெர்க், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். நம்பிக்கைக்குரிய தளமாக இது இருப்பதால் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மிக குறுகிய நேரத்தில பெரிய லாபத்துக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் இந்த செயலியில் அதிகம். மொபைல் மற்றும் சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களை எளிதாக சென்றடையக்கூடிய வகையில் மீஷோ செயலி இருப்பதால், இதில் ரீ செல்லிங் பிஸினஸ் எளிதாக மேற்கொள்ள முடியும். இதனால், இங்கே மீஷோ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

Meesho செயலி

உங்கள் தொலைபேசியில் முதலில் மீஷோ செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த புராசஸ் முடிந்தபிறகு செல்போனில் இருக்கும் மிஷோ செயலியின் ஐகானை கிளிக் செய்யுங்கள். அதனை கிளிக் செய்தவுடன் நீங்கள் மீஷோ செயலியின் முகப்பு பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

Also Read:   ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

புரொடக்டை தேர்ந்தெடுத்தல்

நீங்கள் எந்த பொருளை விற்பனை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனை Search for the product என்ற ஆப்சனில் தேட வேண்டும். அதில் நிறைய வகையான கலெக்ஷன்கள் இருக்கும். உங்களுக்கு விருப்பமான புரொடக்டை விற்பனைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாட்ஸ் அப்பில் பகிர்தல்

நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் புரோடக்டை தேர்தெடுத்துவிட்டால், அதன்பின்னர் ஷேர் ஆன் வாட்ஸ் அப் (Share on WhatsApp) -ஐ கிளிக் செய்து, புரோடக்டின் முழு தகவல்களை பதிவு செய்து, விற்பனையை தொடங்கலாம். வாட்ஸ் அப் மட்டுமல்லாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களிலும் நீங்கள் விற்பனை செய்யும் புரொடக்டுகளை விளம்பரப்படுத்தலாம். அதற்கான ஐகான்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

தொடர்பு கொள்ளும் விவரம்

contact details பக்கத்தில் உங்களை தொடர்பு கொள்வதற்கான தகவல்களை பதிவிட்டுக் கொள்ள வேண்டும். Add the product to Cart என்ற வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

Also Read:   பெட்ரோலும் வாங்கனும், செலவும் குறைக்கனும்னா... இப்ப இதுதான் வழி..!

பொருள் குவாலிட்டி

பொருள் குவாலிட்டி பகுதியில் நீங்கள் தேர்தெடுதிருக்கும் பொருளின் அளவு, தரம் ஆகியவற்றை பதிவிட வேண்டும்

Cart-ல் உள்ள பொருட்கள்

ஏற்கனவே கூறியதுபோல் நீங்கள் விரும்பும் பொருட்களை Cart ஆப்சனில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். நிறைய பொருட்கள் இருக்கும்போது Find the product in Cart ஆப்சனில் எளிதாக தேடிக் கண்டுபிடிக்கலாம்.

ஆன்லைன் பேமண்ட்

பொருட்கள் விற்பனை செய்யும் நீங்கள் வாடிக்கையாளர்கள் பேமெண்ட் வசதியை தேர்தெடுத்துக் கொள்ளலாம். நேரடியாக பணம் செலுத்துதல் அதாவது காஷ் ஆன் டெலிவரி ( Cash on delivery). ஆன்லைன் பேமெண்டு வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம். கேஷ்-ஆன் டெலிவரி கொடுத்தால் பொருட்கள் டெலிவரி செய்த பிறகே உங்களுக்கான தொகை கிடைக்கும்.

Also Read:   வீட்டுக்கு வந்த மகளின் பாய் ஃபிரண்டை கட்டி வைத்து அடித்தே கொன்ற தந்தை! - உதவிய நண்பருக்கு சிக்கல்..

ஆர்டர் விவரம்

ஒருவேளை ஆர்டர் கிடைத்தால் ஆர்டர் செய்தவரின் முகவரி, பொருட்களின் தகவல்கள் மற்றும் பொருட்களை அனுப்புவரின் விவரம் ஆகியவற்றை தெளிவாக பதிவிட வேண்டும். முகவரி, தொலைபேசி எண்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

மார்ஜின் தொகை

நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருளுக்கு கிடைக்க வேண்டிய லாப தொகையை நீங்களே முடிவு செய்து கொள்ள முடியும். நீங்கள் தீர்மானிக்கும் லாபத்தின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு பொருளின் விலை காண்பிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமர்பித்தல்

ஆர்டர் உங்களுக்கு கிடைத்துவிட்டால், சப்ளையர் மற்றும் பயனாளரின் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்களை முழுமையாக இருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பின்னர் ஆர்டர் கொடுக்கலாம். உரிய நபருக்கு பொருள் சேரும். உங்களுக்கும் பணம் கிடைக்கும்.

First published:

Tags: Jobs, Meesho App, Mobile phone, Money, Technology