Home /News /business /

Youtube மூலம் ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? வழிமுறை இதோ...

Youtube மூலம் ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? வழிமுறை இதோ...

Youtube

Youtube

சேனல் உறுப்பினர் என்ற அம்சம் மூலமும் நீங்கள் யூ டியூப் மூலம் சம்பாதிக்கலாம்.

ஆன்லைனில் நேரம் செலவிடுவது, ஒரு விஷயத்தை தெளிவாக விளக்கும் திறமை உங்களிடம் இருந்து, வீடியோக்களை எடிட்டிங் செய்யும் திறமை இருந்தால், நிச்சயம் நீங்கள் காலப்போக்கில் யூடியூப் மூலம் ஆன்லைனில் சம்பாதிக்க முடியும்.

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் புதியதாக யூ டியூப் சேனல் தொடங்கி, இப்போது சம்பாதித்து வருகின்றனர். 3 வயது குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை யூடியூப் மூலம் சம்பாதிக்கின்றனர்.

யூடியூப்பில் வீடியோ அப்லோடு செய்வது எப்படி?, கன்டென்ட் தேர்ந்தெடுப்பது எப்படி? போன்ற அடிப்படையான சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கேமரா மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதாது. கன்டென்டில் தரம், விடாமுயற்சி, பொறுமை உள்ளவர்களை
யூடியூப் கைவிடாது.

யூடியூப் பார்ட்னர் திட்டம் (YouTube Partner Program) :

யூடியூப்பில் சேனல் வைத்திருக்கும் நீங்கள், முதலில் யூடியூப் பார்ட்னர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். சேனல் ஆரம்பித்தவுடன் இந்த திட்டத்தில் நீங்கள் இணைய முடியாது. அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உங்கள் சேனலுக்கு முதலில் 1000 சந்தாதாரர்கள் (Subscribers) மற்றும் 4 ஆயிரம் மணி நேரம் பார்வைகளை ஒரு வருடத்துக்குள் பெற்றிருக்க வேண்டும். Ad Sense account வைத்திருக்க வேண்டும். கம்யூனிட்டி Guidelines - ஐ மீறியிருக்ககூடாது. இவையெல்லாம் ஒழுங்காக இருந்தால், கூகுள் பார்ட்னர் புரோகிராமில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

Also read: 24 மணிநேரத்தில் 4,384 கிமீ… வேகத்தில் சாதனை படைத்த மகிந்திரா எக்ஸ்.யூ.வி 700!

யூடியூப் பிரீமியம் வருவாய் (YouTube Premium revenue) :

யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைந்து, போதுமானளவு வருவாய் நீங்கள் பெற்றுவந்தாலும், உங்கள் கன்டென்டை சந்தாதாரர்கள் விளம்பரம் இல்லாமல் பார்க்க பிரிமியம் சப்ஸ்கிரிப்சன் ஒன்றை வழங்குகிறது யூடியூப். இந்த சந்தா செலுத்தி ஒருவர் உங்கள் வீடியோவைப் பார்த்தால், அதற்கேற்பவும் உங்களுக்கு வருவாய் கிடைக்கும். பிரிமியம் செலுத்துபவர்கள் விளம்பரம் இல்லாமல் உங்கள் வீடியோவைப் பார்க்கலாம். அந்தளவுக்கு உங்கள் கன்டென்ட் தரமாக இருக்க வேண்டும்.

சேனல் உறுப்பினர் (Channel memberships)

சேனல் உறுப்பினர் என்ற அம்சம் மூலமும் நீங்கள் யூ டியூப் மூலம் சம்பாதிக்கலாம். அதாவது, சேனல் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக நீங்கள் செய்யும் வீடியோக்கள், அவர்கள் மட்டுமே பார்க்க இயலும். இந்த ஆப்சன் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைந்திருக்க வேண்டும், ஆயிரத்துக்கும் மேலான சப்ஸ்கிரைபர்கள் இருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் தொடர்பான தவறான கன்டென்ட் கொண்ட வீடியோக்களை போட்டிருக்கக்கூடாது, விதிமுறைகளை மீறியிருக்ககூடாது. இந்த விதிமுறைகளுக்குட்பட்டவர்களுக்கு சேனல் உறுப்பினர் ஆப்சனை யூடியூப் வழங்குகிறது.

Also read:  அக்டோபர் 15 முதல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 – ரூ.3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு!

மார்க்கெட்டிங் :

சிறந்த படைப்பாளிகள் சொந்தமான பிராண்டுகளையும் தங்கள் சேனல் மூலம் விளம்பரம் செய்து சம்பாதிக்க முடியும். கூகுள் விளம்பரம் இல்லாமல், கன்டென்டுகளுக்கு தொடக்கத்தில் அல்லது இடையில் தாங்கள் விரும்பும் பிராண்டுகளை விளம்பரம் செய்யலாம். இதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 10,000 சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்க வேண்டும்.
Published by:Arun
First published:

Tags: Business, Youtube

அடுத்த செய்தி