டிஜிட்டல் வாலெட், மொபைல் எண்ணிலிருந்து ஆதார் இணைப்பைத் துண்டிப்பது எப்படி?

தற்போது அவர்களுக்குள் இருக்கும் ஒரு கேள்வி, தாங்கள் செய்துள்ள ஆதார் எண் இணைப்பை எப்படித் துண்டிப்பது?

Web Desk | news18
Updated: December 31, 2018, 6:43 PM IST
டிஜிட்டல் வாலெட், மொபைல் எண்ணிலிருந்து ஆதார் இணைப்பைத் துண்டிப்பது எப்படி?
ஆதார்
Web Desk | news18
Updated: December 31, 2018, 6:43 PM IST
2018-ம் ஆண்டு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆதார் இணைப்பு. வங்கி சேவை, மொபைல் எண், அரசு நலத்திட்டங்கள் என அனைத்திற்கும் ஆதார் கார்டு இணைப்புக் கட்டாயம் எனக் கூறப்பட்டது.

மறுபக்கம் அதனால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, இதனால் நிறைய மொசடிகள் நடைபெறுகிறது எனச் சர்ச்சைகள் எழ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அரசு திட்டங்களைத் தவிரப் பிற தனியார் சேவைகளுக்கு, வங்கி சேவைகளுக்கு எல்லாம் ஆதார் கட்டாயம் இல்லை எனத் தீர்ப்பு வந்தது.

ஆனால் மக்கள் பலர் இ-வாலெட், மொபைல் எண் போன்றவற்றில் ஏற்கனவே ஆதார் இணைப்பைச் செய்துவிட்டு இருந்தனர். தற்போது அவர்களுக்குள் இருக்கும் ஒரு கேள்வி, தாங்கள் செய்துள்ள ஆதார் எண் இணைப்பை எப்படித் துண்டிப்பது?

எனவே டிஜிட்டல் வாலெட் மற்றும் மொபைல் எண்ணிலிருந்து ஆதார் இணைப்பைத் துண்டிப்பது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

டிஜிட்டல் வாலெட்


பேடிஎம், ஆமேசான் பே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் வாலெட் செயலிகளில் இருந்து தங்களது ஆதார் இணைப்பை எப்படித் துண்டிப்பது என்று இங்குப் பார்ப்போம்.

1. பேடிஎம் வாலெட் சேவையிலிருந்து ஆதார் இணைப்பைத் துண்டிக்க 0120-4456-456 அல்லது 011-3377-6677 உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் சேவை மைய எண்ணை தொடர்புகொள்ள வேண்டும்,

2. வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேடிஎம் கணக்கிலிருந்து ஆதார் எண்ணைத் துண்டிக்க விரும்புகிறோம் எனக் கூற வேண்டும். அதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும்.

3. அந்த இணைப்பை கிளிக் செய்து வரும் பக்கத்தில் தேவையான விவரங்களை அளித்து உறுதி செய்த பிறகு 72 மணி நேரத்தில் பேடிஎம் வாலெட்டிலிருந்து ஆதார் இணைப்புத் துண்டிக்கப்படும்.

மொபைல் எண்


மொபைல் எண்ணிலிருந்து ஆதார் இணைப்பை எப்படித் துண்டிப்பது என இங்குப் பார்ப்போம்.

1. டிஜிட்டல் வாலெட் போன்று மொபைல் நெட்வொர்க்கின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி ஆதார் இணைப்பை துண்டிக்கலாம்.

2. அல்லது, அருகில் உள்ள சம்மந்தப்பட்ட டெலிகாம் நிறுவனத்தின் ஸ்டோர்களுக்கும் சென்றும் ஆதார் இணைப்பைத் துண்டிக்கலாம். இவ்வாறு செய்யும் போது 48 மணிநேரத்தில் மொபைல் எண்ணில் இருந்து ஆதார் எண் இணைப்புத் துண்டிக்கப்படும்.

மேலும் பார்க்க: 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை.. ஆனால் பாகிஸ்தானில் விமானிகள்
First published: December 31, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...