Home /News /business /

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களுக்கான KYC சரிபார்ப்பை நிறைவு செய்வது எப்படி?

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களுக்கான KYC சரிபார்ப்பை நிறைவு செய்வது எப்படி?

நம்பகமான முதலீட்டாளர்களின் நிதிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ZebPay போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் ஆரம்பத்திலிருந்தே கடுமையான KYC உத்தியைக் கடைப்பிடித்து வருகின்றன. மேலும், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் KYC சரிபார்ப்பு செயல்முறை மிகவும் எளிமையானது.

நம்பகமான முதலீட்டாளர்களின் நிதிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ZebPay போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் ஆரம்பத்திலிருந்தே கடுமையான KYC உத்தியைக் கடைப்பிடித்து வருகின்றன. மேலும், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் KYC சரிபார்ப்பு செயல்முறை மிகவும் எளிமையானது.

நம்பகமான முதலீட்டாளர்களின் நிதிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ZebPay போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் ஆரம்பத்திலிருந்தே கடுமையான KYC உத்தியைக் கடைப்பிடித்து வருகின்றன. மேலும், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் KYC சரிபார்ப்பு செயல்முறை மிகவும் எளிமையானது.

மேலும் படிக்கவும் ...
    கிரிப்டோ சொத்துக்கள் அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிட்காயின் மற்றும் ஈதர் போன்ற நாணயங்கள் எப்போதும் உச்சத்தில் இருப்பதால், கிரிப்டோக்களின் அற்புதமான உலகில் நுழைவதற்கு இதுவே சிறந்த நேரம். ஆனால் சற்று காத்திருங்கள், நீங்கள் வர்த்தகத்தைத் தொடங்கி திறன்மிக்க கிரிப்டோ பயனராக மாறுவதற்கு முன், உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    நம்பகமான முதலீட்டாளர்களின் நிதிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ZebPay போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் ஆரம்பத்திலிருந்தே கடுமையான KYC உத்தியைக் கடைப்பிடித்து வருகின்றன. மேலும், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் KYC சரிபார்ப்பு செயல்முறை மிகவும் எளிமையானது.

    கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் KYC செயல்முறையை நிறைவுசெய்யும்போது நீங்கள் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான எக்ஸ்சேஞ்ச்கள் ஒரேமாதிரியான KYC செயல்முறையைக் கொண்டிருப்பதால், இந்தக் கட்டுரையில் ZebPay இன் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறோம்.

    படிநிலை 1 – உங்கள் ஆவணங்களைச் சேகரிக்கவும் 

    கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஒரு கணக்கைத் திறந்த பிறகு, உங்கள் KYC சரிபார்ப்பிற்காக பின்வரும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:

    1 - PAN கார்டு மற்றும் 

    2- முகவரிச் சான்று

    முகவரிச் சான்று என்பது உங்கள் ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது கடந்த மூன்று மாதங்களுக்கான பயன்பாட்டு பில்களில் ஏதேனும் ஒன்று. உதாரணமாக, ZebPay போன்ற வலுவான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் உங்கள் கணக்கைச் சரிபார்க்க காசோலை அல்லது வங்கி அறிக்கையைக் கேட்கின்றன.

    படிநிலை 2 – மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள்

    உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றத் தயாரானதும், இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

    1 - உங்கள் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சின் அமைப்புகள் பக்கத்திற்குச் சென்று, அடையாளத்தை சரிபார்க்கவும் அல்லது KYC ஐ நிறைவு செய்யவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

    2 - அங்கிருந்து, உங்கள் அடையாளச் சான்றினைப் பதிவேற்றி நீங்கள் செயல்முறையைத் தொடங்க வேண்டும். இந்தக் கட்டத்தில் உங்கள் ஃபோன் கேலரியில் இருந்து உங்கள் பான் கார்டு விவரங்களைப் பதிவேற்றலாம் அல்லது உங்கள் ஃபோன் கேமராவைப் பயன்படுத்தி உங்கள் பான் கார்டின் படத்தைக் கிளிக் செய்யலாம்.

    3 - இதைத் தொடர்ந்து உங்கள் முகவரிச் சான்றைப் பதிவேற்றவும். இதற்கு, உங்கள் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது பயன்பாட்டு பில் என நீங்கள் பதிவேற்றவிருக்கும் அடையாள வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

    4 - ஆவண வகையின்படி தேவையான அனைத்து படங்களையும் பதிவேற்றுவதை உறுதிசெய்யவும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஆதார் கார்டு விவரங்களைப் பதிவேற்றினால், கார்டின் முன் மற்றும் பின் பக்கங்களின் படங்களைப் பதிவேற்றுவதை உறுதிசெய்யவும்.

    5 - KYC விவரங்களை நிரப்புவது செயல்முறையின் ஒரு பகுதியாகும். அடுத்த கட்டத்தில் உங்கள் வங்கி விவரங்களைச் சேர்ப்பதும் சரிபார்ப்பதும் அடங்கும். உங்கள் எக்ஸ்சேஞ்சின் அமைப்புகள் பக்கத்திலிருந்து உங்கள் வங்கி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வங்கி விவரங்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    6 - விவரங்களை வழங்குவதோடு உங்கள் வங்கி காசோலை அல்லது வங்கி அறிக்கையின் புகைப்படத்தையும் சேர்க்க வேண்டியிருக்கும். உங்கள் PAN கார்டைச் சேர்ப்பதில் செய்த அதே நடைமுறையை இந்த படிநிலையிலும் பின்பற்றவும், உங்கள் பெயர், கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு தெளிவாகத் தெரிகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

    சிறப்பு! அவ்வளவுதான். கவர்ச்சிகரமான கிரிப்டோகரன்சி உலகில் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் KYC மற்றும் வங்கி விவரங்களை கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் அங்கீகரிக்கும் வரை காத்திருக்கவும்.

    படிநிலை  3 – உங்களுக்கு KYC ஏன் தேவை 

    கிரிப்டோகரன்சி மட்டும் அல்லாமல், வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் செய்யப்படும் எந்தவொரு பணப் பரிவர்த்தனைகளுக்கும் KYC கட்டாயமாகும். KYC உங்களையும் உங்கள் விவரங்களையும் அங்கீகரித்து கிரிப்டோ எக்ஸ்சேஞ்சிற்கு ஒட்டுமொத்த பாதுகாப்பைச் சேர்க்கிறது.

    அடிப்படையில், எந்தவொரு நிதி பரிவர்த்தனையையும் மேற்கொள்ள ஒருவர் முதலில் அவர்களின் KYC ஐ வைத்திருக்க வேண்டும். உங்கள் KYC சரிபார்ப்பு செயல்முறையை நீங்கள் நிறைவு செய்ததன் மூலம், கிரிப்டோ எக்ஸ்சேஞ்சிற்கு உங்கள் அடையாளம், முகவரி மற்றும் நிதி வரலாறு பற்றிய தகவலை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். உங்கள் சரிபார்ப்பு நிறைவடைந்ததும், கிரிப்டோகரன்சியை வாங்குவதற்கும், கவர்ச்சிகரமான பிளாக்செயின் உலகில் நுழைவதற்கும் வங்கியில் உங்கள் கரன்சியை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

    படிநிலை 4 – KYC நிராகரிப்பின் அபாயத்தைக் குறைத்திடுங்கள் 

    KYC இன் முக்கியத்துவத்தை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், எனவே கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள படிநிலைகளை நீங்கள் பின்பற்றியிருந்தால், உங்கள் KYC உடன் எந்த பிரச்சனையும் இருக்காது, ஆனால் சில சமயங்களில் நிராகரிப்புகள் ஏற்படும். KYC நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றவும்.

    1 - முதலில், சரிபார்ப்பிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் படங்களை நன்றாகப் பார்வையிடுங்கள். சில நேரங்களில், அவை மங்கலாகவோ அல்லது தெளிவில்லாமலோ இருக்கலாம், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சால் உங்கள் ஆவணங்களை அங்கீகரிக்க முடியாது, இது KYC நிராகரிப்பிற்கு வழிவகுக்கும்.

    2 - உங்கள் பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்பட IDகள் காலாவதியாகமல் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும், ஏனெனில் அவை உங்கள் அடையாளச் சான்றினைச் செல்லாததாக்கக்கூடும்.

    3 - இறுதியாக, வழங்கப்பட்ட வங்கி விவரங்கள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தவும், நீங்கள் காசோலை அல்லது வங்கி அறிக்கையைச் சான்று ஆவணமாகப் பதிவேற்றியிருந்தால், உங்கள் பெயர், கணக்கு எண் மற்றும் IFSC விவரங்கள் போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரிகிறது என்பதை உறுதிப்படுத்தவும்.

    KYC செயல்முறைகளை நிறைவுசெய்வது வெற்றிகரமான கிரிப்டோ சொத்து பயணத்திற்கான முதல் படிநிலையாகும். தொழிற்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் விரைவாக வளர்ந்து வரும் உண்மையான ஆனால் தேவையற்ற கூறுகளை ஈர்க்கும் மோசடி சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் அடையாளச் சரிபார்ப்பு ஆரம்ப நிலையிலேயே செய்யப்படுவதை இந்தச் செயல்முறை உறுதிசெய்கிறது.

    உங்கள் நேரத்தை செலவிட்டு, சிக்கலில்லா வெற்றிகரமான KYC ஐ நிறைவுசெய்ய இங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்து படிநிலைகளையும் மற்றும் உங்கள் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சிற்குத் தேவைப்படும் குறிப்பிட்ட படிநிலைகளையும் பார்வையிடவும். இறுதியாக, ZebPay  போன்ற பாதுகாப்பான மற்றும் நம்பகமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சை நீங்கள் தேர்வுசெய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது எளிதாகப் பதிவேற்றுவதற்கும் மற்றும் உங்கள் நாணயங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வலுவான தளத்தை வழங்குகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Crypto currency, KYC

    அடுத்த செய்தி