Income Tax Refund நிலையை ஆன்லைனில் சரிபார்க்கும் வழிமுறைகள்!

Income Tax Refund நிலையை ஆன்லைனில் சரிபார்க்கும் வழிமுறைகள்!

கோப்புப்படம்

பணத்தைத் திரும்பப்பெறுதல் காலாவதியானது ( refund has expired) என்று ITR நிலை காண்பித்தால், 90 நாட்களுக்குள் செல்லுபடியாகும் காலத்திற்குள் பணம் செலுத்துவதற்கு பணத்தைத் திரும்பப்பெறவில்லை என்று அர்த்தம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதன் (Filing an Income Tax Return) மூலம் வரி செலுத்துவோர் எந்தவொரு கூடுதல் வரி செலுத்துதலையும் கோர வருமான வரித் துறை (Income Tax (I-T) Department)  அனுமதிக்கிறது, 2019-20 நிதியாண்டிற்க்கான காலக்கெடு 2020 டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது. வருமான வரி மதிப்பீட்டாளர்கள் வருமான வரி இ-ஃபைலிங் வலைத்தளம் - incometaxindiaefiling.gov.in மூலமாகவோ அல்லது National Securities Depository Limited (NSDL) இன் மின்-ஆளுமை வலைத்தளம் - tin.tin.nsdl.com மூலமாகவோ வருமான வரி தாக்கல் நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

வருமான வரி வலைத்தளத்திலிருந்து ITR நிலையை  (ITR status) சரிபார்க்க வேண்டிய ஸ்டெப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப் 1: வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தைப் (income tax e-filing website) பார்வையிட்டு, விரைவான லிங்க்குகள் பேனலின் கீழ் இருக்கும் 'ஐ.டி.ஆர் நிலை' ('ITR status') என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டேப் 2: ITR ஐ தாக்கல் செய்த பின்னர் பெறப்பட்ட நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) மற்றும் ஒப்புதல் எண்ணை (acknowledgment number) உள்ளிடவும்

ஸ்டேப் 3: கேப்ட்சா குறியீட்டை (captcha code) உள்ளிட்டு கோரிக்கை OTP ஐக் (request OTP) கிளிக் செய்யவும்

ஸ்டேப் 4: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி (submit) என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ITR நிலை ஸ்கிரீனில் பிரதிபலிக்கும்.

Tin.tin.nsdl.com வலைத்தளத்தின் மூலம் வருமான வரி நிலையை சரிபார்க்க, பயனர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை (Permanent Account Number (PAN)) உள்ளிட்டு தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் ITR நிலை ஸ்கிரீனில் பிரதிபலிக்கும். படிவம் 26ASல் (Form 26AS) உள்ள 'வரி கடன் அறிக்கைகளில்' ('Tax Credit Statements') 'திருப்பிச் செலுத்தப்பட்ட' ('Refund paid') நிலை பிரதிபலிக்கிறது. 

வருடாந்திர ஐ.டி.ஆரைத் தாக்கல் செய்யும் போது மதிப்பீட்டாளர் பயன்படுத்தும் விருப்பத்தைப் பொறுத்து, பணத்தைத் திரும்ப பெறுவது மின்னணு முறை மூலம் அதாவது கணக்கிற்கு நேரடி கிரெடிட் அல்லது பணத்தைத் திருப்பிச் செலுத்துதல் மூலம் செய்யப்படுகிறது. எனவே, வரி செலுத்துவோர் சரியான கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டு உள்ளிட்ட முழுமையான முகவரி விவரங்களுடன் தாக்கல் செய்யவேண்டும். 

Also read... வங்கி விடுமுறை நாட்கள் 2021 - ஜனவரி மாதம் இந்த தேதிகளில் பேங்க்குகள் திறந்திருக்காது!

செக்குகள் (cheques) மூலம் அனுப்பப்படும் பணத்தைத் திருப்பிச் செலுத்துவது வரி செலுத்துவோர் குறிப்பிட்டுள்ளபடி ஸ்பீட் போஸ்ட் மூலம் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வரி செலுத்துவோருக்கு விநியோகிப்பதற்காக சிபிசி-பெங்களூர் / ஏஓ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (ITR by CPC-Bangalore/AO to State Bank of India, CMP branch (Refund Banker)) மூலம் ITR ஐ செயலாக்குவதன் மூலம் உருவாக்கப்படும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு 'பணத்தைத் திருப்பிச் செலுத்தும் திட்டம்' ( 'Refund Banker Scheme') உதவுகிறது. 

பணத்தைத் திரும்பப்பெறுதல் காலாவதியானது ( refund has expired) என்று ITR நிலை காண்பித்தால், 90 நாட்களுக்குள் செல்லுபடியாகும் காலத்திற்குள் பணம் செலுத்துவதற்கு பணத்தைத் திரும்பப்பெறவில்லை என்று அர்த்தம். வரி செலுத்துவோர், இது போன்ற நிலையில், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை எழுப்பலாம். திரும்பப்பெறுதல் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டால்- பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் மின்-தாக்கல் போர்ட்டலில் (e-filing portal) உள்நுழைந்து பணத்தைத் திரும்பப்பெறுதல் கோரிக்கை ஆன்லைனில் எழுப்பப்பலாம். இப்போது நிலை 'திரும்பியது' (returned) எனக் காட்டினால், வரி செலுத்துவோர் சரியான வங்கி விவரங்களைக் கொடுக்க வேண்டும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: