முகப்பு /செய்தி /வணிகம் / உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா..? எப்படி சரிபார்ப்பது..? வழிமுறைகள் இதோ...!

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா..? எப்படி சரிபார்ப்பது..? வழிமுறைகள் இதோ...!

பான் கார்டு

பான் கார்டு

உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா? இல்லையா என்பதை வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் போர்ட்டலில் சரிபார்க்கலாம். அதற்கான வழிமுறை இதோ..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மார்ச் 31ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இணைக்காதவர்கள் மார்ச் இறுதிக்குள் இணைக்க வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறினால், பான் கார்டு செயலிழக்க நேரிடும். அதன் பின்னர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் வசிக்கும் தனிநபர்கள், வருமான வரிச் சட்டம் 1961 இன் படி நாட்டில் வசிக்காதவர்கள், எண்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் ஆதார்- பான் இணைக்கத் தேவை இல்லை. மற்ற அனைவருக்கும் இந்த உத்தரவு கட்டாயமாகும்.

பான்-ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT)  அறிவிப்பின்படி, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31  ஆகும். இரண்டு அடையாள அட்டைகளையும் இணைக்காதவர்கள் அதிகாரப்பூர்வ தளமான  - incometax.gov.in/iec/foportal -இன் மூலம் இணைக்கலாம். காலதாமதம் காரணமாக அடையாள அட்டைகள் இணைப்பு செயல்முறையைத் தொடங்க மக்கள் ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

காலக்கெடு முடிந்துவிட்டால், பான் கார்டு செயலிழந்துவிடும். மேலும், காலக்கெடு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், உங்கள் பான் கார்டு இன்னும் செல்லுபடியாகுமா இல்லையா என்பதை, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் போர்ட்டலில் சரிபார்க்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கே சொல்கிறோம்.

உங்கள் பான் கார்டின் செல்லுபடியை சரிபார்க்க-

  • உங்கள் பான் விவரங்களைச் சரிபார்க்க வருமான வரித் துறையின் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/verifyYourPAN இணையதளத்தை பார்வையிடவும்.
  • அதில் உங்கள் பான் எண், பான் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் முழுப் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
  • எல்லாம் உள்ளிட்ட பின் சமர்ப்பித்தால் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும்.
  • அதை உள்ளிட்டுச் சமர்பித்ததும் உங்கள் பான் கார்டு ஆக்ட்டிவ் நிலையில் இருக்கிறதா, காலாவதி ஆகிவிட்டதா என்ற செய்தியை இணையதளம் காண்பிக்கும்.

எஸ்.எம்.எஸ் மூலம் பான் கார்டு நிலையை அறிவது எப்படி?

என்னிடம் இணையம் இல்லை. வேறு வழிகளில் பான் செயல்பாடு நிலையை தெரிந்து கொள்ள முடியாத என்று கேட்டால். வழி உண்டு. உங்கள் மொபைல் எண் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கான வழிமுறையையும் சொல்கிறோம்.

  • உங்கள் பான் எண் ABCDE1234F எனில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து NSDL PAN ABCDE1234F என்று அடித்து செய்தியை அனுப்பவேண்டும்.
  • எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு, உங்கள் பான் கார்டு செயலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் நிலை குறித்த எஸ்எம்எஸ் உங்கள் போனுக்கு கிடைத்துவிடும்.

First published:

Tags: Aadhar, Income tax, Pan card