முகப்பு /செய்தி /வணிகம் / பான் கார்டு சிக்கல்.. உங்கள் போட்டோவில் பிரச்னையா? ஈசியா ஆன்லைனில் மாற்றலாம்.. இதோ வழிமுறைகள்!

பான் கார்டு சிக்கல்.. உங்கள் போட்டோவில் பிரச்னையா? ஈசியா ஆன்லைனில் மாற்றலாம்.. இதோ வழிமுறைகள்!

பான்

பான்

Pan Card : பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதில் பதிவாகியுள்ள விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது எழுத்துப் பிழை, கையொப்பம் அல்லது புகைப்படம் பொருந்தாதது உட்பட உங்கள் பான் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், அதை உடனே செய்வது நல்லது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்கள் பான் கார்டில் இருக்கும் உங்களின் புகைப்படம் திருப்திகரமானதாக இல்லையா? அல்லது அந்த புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? "ஆம்" என்கிற பட்சத்தில், https://tin.tin.nsdl.com/pan/index.html என்கிற நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) அதிகாரப்பூர்வ இணையதளம் உங்களுக்கு உதவலாம்.

இன்னும் தெளிவாக கூற வேண்டுமெனில், குறிப்பிட்ட இணையதளம் வழியாக உங்கள் பான் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் வழியாகவே மாற்றிக்கொள்ளலாம். பான் கார்டு, இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட ஒரு ஆவணமாகும். இது ஒரு தனிப்பட்ட நபருக்கான அடையாளத்தை நிரூபிக்கப் பயன்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கும் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும் மிகவும் அவசியமான ஒரு ஆவணம் என்பதும் நாம் அறிந்ததே.

ஒவ்வொருவரின் பான் கார்டும் பெர்மெனன்ட் அக்கவுண்ட் நம்பர், அதாவது நிரந்தர கணக்கு எண் எனப்படும் 10-இலக்க ஆல்பா நியூமெரிக்கல் நம்பர்களை கொண்டுள்ளது. இதன் கீழ்தான், பான் கார்டு வைத்திருப்பவர்களின் நிதி சார்ந்த பதிவுகள் பராமரிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் நிகழ்த்த, ஒரு வங்கியில் புதிய அக்கவுண்ட் தொடங்கவும் உங்களுக்கு பான் கார்டு விவரங்கள் தேவைப்படும்.

இதனாலே பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதில் பதிவாகியுள்ள விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது எழுத்துப் பிழை, கையொப்பம் அல்லது புகைப்படம் பொருந்தாதது உட்பட உங்கள் பான் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், அதை உடனே செய்வது நல்லது. குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் உங்கள் பான் கார்டில் உள்ளதென்றால், அது தற்காலத்திற்கு பொருந்தாதது போல் அல்லது சற்றே பழையதாகத் தோன்றினால், உங்கள் பான் கார்டில் உள்ள புகைப்படத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த மாற்றத்தை நிகழ்த்த, நீங்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அதெப்படி என்கிற எளிய மற்றும் படிப்படியான செயல்முறை இதோ:

ஆன்லைன் வழியாக பான் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

01. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் அல்லது இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிற்குள் செல்லவும் (https://tin.tin.nsdl.com/pan/index.html) அல்லது UTITSL-இன் போர்ட்டலுக்குள் (https://www.pan.utiitsl.com/PAN/index.jsp) செல்வதன் வழியாகவும் நீங்கள் பான் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்றலாம்.

02: அப்ளிக்கேஷன் டைப் பிரிவின் கீழ்தோன்றும் மெனுவில், ஏற்கனவே இருக்கும் பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் (changes or corrections in the existing PAN Data ) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

03: பின்னர் நீங்கள் 'கேட்டகிரி டைப்'-ஐ (category type) தேர்வு செய்ய வேண்டும். இங்கே Individual விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

04: பின்னர் கேட்கப்படும் தேவையான விவரங்களைக் கொடுக்கவும், பின்னர் கேப்ட்சா (Captcha Code) குறியீட்டை உள்ளிட்டு (Submit) சமர்ப்பிக்கவும்.

05: நீங்கள் இப்போது கேஒய்சி (KYC) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

06: இப்போது 'புகைப்படம் பொருந்தவில்லை' மற்றும் 'கையொப்பம் பொருந்தவில்லை' என்பதற்கான விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள்.அதில் உங்கள் தேவைக்கேற்ப ஒன்றைத் தேர்வு செய்யவும்.

07: இப்போது மீண்டும் தேவையான தகவல்களை கொடுத்து, நெக்ஸ்ட் (Next) என்பதைக் கிளிக் செய்யவும்.

08: பின்னர் உங்கள் அடையாள அட்டை, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரங்களை இணைக்கசொல்லி கேட்கப்படுவீர்கள், அதை செய்யுங்கள்.

09: அதை செய்தபின்னர், டிக்ளரேஷன் செக்பாக்ஸை டிக் செய்து சமர்ப்பி (Submit) என்கிற பட்டனை அழுத்தவும்.

10: மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகள் அல்லது படிகளை முடித்த பிறகு, நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய பகுதிக்கு வருவீர்கள். இந்தியாவில் உள்ள முகவரிகளின் கீழ் பான் கார்டில் உள்ள உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்ற ₹101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும், அதுவே இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிகளுக்கு ₹1011 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.

11: குறிப்பிட்ட தொகையை செலுத்திய பிறகு, குறிப்பிட்ட செயல்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான 15 இலக்க எண்ணைப் (acknowledgement number) பெறுவீர்கள்.

12: தற்போது உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வருமான வரித்துறையின் Pபான் சேவை பிரிவுக்கு அனுப்ப வேண்டும்

13: மேலும், உங்கள் விண்ணப்பம் எந்த கட்டத்தை எட்டியுள்ளது என்பதை கண்காணிக்க உங்களுக்கு கிடைத்த 15 இலக்க ஒப்புகை எண்ணைப் பயன்படுத்தலாம்.


First published:

Tags: Pan card