உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் KYC விவரங்களை மாற்றுவது குறித்த முழு விவரம்!

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் KYC விவரங்களை மாற்றுவது குறித்த முழு விவரம்!

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் நேரடியாக முதலீடு செய்ய ஆன்லைன் பரிவர்த்தனைகளே சிறந்த வழி, இதில் கமிஷன் தொகைகளையும் மிச்சப்படுத்தலாம்.

  • Share this:
உங்கள் KYC நிறைவடைந்து இருந்தால், ஒரு மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் ஆஃப்லைனிலோ ஆன்லைனிலோ நேரடியாக முதலிடு செய்யலாம். ஆன்லைனில் பரிவர்த்தனையைச் செய்வது உங்களுக்கு சிரமமாக இருந்தால், அருகிலுள்ள கிளைக்குச் செல்வதன் மூலம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் நேரடியாக முதலீடு செய்ய ஆன்லைன் பரிவர்த்தனைகளே சிறந்த வழி, இதில் கமிஷன் தொகைகளையும் மிச்சப்படுத்தலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் KYC விவரங்கள் :

ஒரு திட்டத்தில் உங்கள் விவரங்களை நீங்கள் மாற்றினால், புதிய தகவல்கள் உங்கள் மற்ற அனைத்து நிதி திட்டங்களிலும் மாற்றப்படும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஒரு கணக்கைத் திறப்பதற்கு முன்பும் KYC நடைமுறைகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். KYC குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.,

உங்கள் KYC - ஐ ஏன் மாற்ற வேண்டும்?

நம்மில் பலர் வேலை தேடுவதற்காக வேறு நகரங்களுக்கு செல்கிறோம். நம்மில் சிலர் வேறு நாடுகளுக்கு கூட குடியேறுகிறார்கள். இத்தகைய மாற்றங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் சேமிக்கப்படும். அதில் உங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் KYC ஆவணத்தில் அப்டேட் செய்யப்பட வேண்டும். நீங்கள் ஒரு முறை KYC விவரங்களை உள்ளீடு செய்து சேமித்து வைத்து கொண்டால், தேவைப்படும் போது சில தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.

எனது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைத் தவிர, என்னிடம் டிமேட் கணக்கு மற்றும் ஒரு சில வங்கி கணக்குகளும் உள்ளன. KYC-யில் மாற்றம் செய்தால் அது எனது மற்ற பங்குகளையும் பாதிக்குமா?

இல்லை. இது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்களில் மட்டுமே பிரதிபலிக்கிறது. உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் KYC-ஐ நீங்கள் மாற்றும்போது வங்கிகளில் உள்ள உங்கள் KYC மற்றும் டிமேட் கணக்குகள் மாறாது.

பங்குசந்தையில் முதலீடு செய்ய ஒருவருக்கு டிமேட் கணக்குத் தேவைப்படுகிறது. முந்தைய காலங்களில் பங்குகள் சான்றிதழ் வடிவத்தில் இருந்து வந்தன. ஆனால் தற்போது அவை மின்னணு வடிவத்தில் சேமிக்கப்படுகின்றன. இதனால் பங்குகளைக் கையாளுவதற்கு முன்னர் நீங்கள் ஒரு டிமேட் கணக்கை வைத்திருப்பது தற்போது கட்டாயமாகும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் KYC-யில் செய்யும் மாற்றும் உங்கள் டிமேட் கணக்கு விவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது.

KYC ஐப் புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் KYC ஐப் புதுப்பிக்க, நீங்கள் ‘KYC விவரங்கள் மாற்றம்’ என்ற படிவத்தை நிரப்பி, ஆவணத்தை அப்லோடு செய்ய வேண்டும். இந்த படிவத்தை மியூச்சுவல் ஃபண்டுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெறலாம்.

அனைத்து KYC புதுப்பித்தல் படிவங்களுடனும் PAN கார்டின் நகலை இணைக்க வேண்டியது அவசியம். பெயர் மற்றும் பான் எண் போன்ற அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் மாற்ற விரும்பும் தகவலை தேர்வுசெய்து மாற்ற வேண்டும். உங்கள் முகவரியை மாற்றுவதற்கு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, மின்சார பில்கள், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரியை தெளிவாக குறிப்பிடும் சமீபத்திய வங்கி கணக்கு நகலை கொடுக்க வேண்டும். தகவல்தொடர்புக்கான முகவரி மற்றும் நிரந்தர முகவரி வேறுபட்டால், இரண்டிற்குமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் KYC தகவலை ஆன்லைனில் மாற்ற முடியுமா?

இல்லை., முடியாது. உங்கள் KYC-ஐ நீங்கள் முதன்முறையாக சமர்பிக்கிறீர்கள் என்றால், அதை ஆன்லைனில் செய்யலாம். அப்போது உங்கள் விவரங்களையும், ஆவணங்களையும் நீங்கள் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் பண்ட் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பின்னர், நீங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த, வீடியோ அழைப்பின் மூலம் ஒரு நபர் மூலம் சரிபார்ப்பு செய்யப்படுகிறது.

ஆனால் நீங்கள் உங்களது KYC-ஐ மாற்ற விரும்பினால் ஆஃப்லைன் முறைக்கு மாற வேண்டும். இதற்கான படிவத்தை டவுன்லோடு செய்து அதிலிருக்கும் தகவல்களை நிரப்பி வலைதளத்தில் சமர்ப்பித்த 7-10 நாட்களுக்குள் KYC விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டு விடும்.

நான் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் KYC-ல் மாற்றம் செய்தால், அது மற்ற எல்லா கணக்குகளிலும் தானாகவே புதுப்பிக்கப்படுமா?

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் KYC நீங்கள் புதுப்பிக்கும்போது, ​​ஃபண்ட் ஹவுஸுக்கு சேவை செய்யும் ஆர்டிஏவைப் பொருட்படுத்தாமல், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் இது பிரதிபலிக்கிறது. எனவேமற்ற மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் மாற்றங்கள் புதுப்பிக்கப்படும்.
Published by:Ram Sankar
First published: