பொது வருங்கால வைப்பு நிதி (PPF) தொகைக்கான வட்டியை எவ்வாறு கணக்கிடுவது?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) தொகைக்கான வட்டியை எவ்வாறு கணக்கிடுவது?

மாதிரி படம்

ஒரு நிதியாண்டில் பிபிபிஎஃப் கணக்கின் அதிகபட்ச வட்டி விகிதம் 8% ஆகும். இந்த தொகை முற்றிலும் வரிவிலக்கு கொண்டது மற்றும் பணம் ஆண்டுதோறும் கூடும் என்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கின்றன. எனவே ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் கூட்டு வட்டி மூலம் உங்கள் டெபாசிட் தொகையை பெறலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொது வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் என்பது இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய முதலீட்டு விருப்பங்களின் மிகவும் பிரபலமான வடிவங்களில் ஒன்றாகும். கணக்கு முதிர்ச்சியடையும் முன் ஒரு முதலீட்டாளர் பிபிஎஃப்பில் 15 நீண்ட ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதி அதன் சந்தாதாரர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் விலக்கு-விலக்கு-விலக்கு (EEE) பிரிவின் கீழ் வருவதால் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. 

முதன்மை முதலீடு, வட்டித் தொகை மற்றும் முதிர்வு மதிப்பு அனைத்தும் 1961ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பிபிஎஃப் நீண்ட கால முதலீட்டிற்கான மிகவும் விரும்பப்படும் முதலீடுகளில் ஒன்றாகும். இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், இந்த திட்டம் ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, முதலீட்டின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது.

பிபிஎஃப் வட்டி விகிதம் என்றால் என்ன?

ஒரு நிதியாண்டில் பிபிபிஎஃப் கணக்கின் அதிகபட்ச வட்டி விகிதம் 8% ஆகும். இந்த தொகை முற்றிலும் வரிவிலக்கு கொண்டது மற்றும் பணம் ஆண்டுதோறும் கூடும் என்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கின்றன. எனவே ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் கூட்டு வட்டி மூலம் உங்கள் டெபாசிட் தொகையை பெறலாம்.

Also read... EPFO போர்டலைப் பயன்படுத்தும் வழிமுறைகள் உங்களுக்குத் தெரியுமா? இதைப் படிங்க..பிபிஎஃப் வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பிபிஎஃப் விதிகளின்படி, வட்டித் தொகை மாதந்தோறும் கணக்கிடப்படும். ஆனால் அது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 5ம் தேதிக்கு முன் வைப்பு செய்யப்பட்டால், வட்டி தொகை ஒரு மாதத்திற்கு செலுத்தப்படும். அதாவது, பிபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு மாதத்தின் 5ம் தேதி முதல் கடைசி நாள் வரை ஒரு நபரின் கணக்கில் குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆகையால், ஒரு நபர் ஆண்டின் எந்த நேரத்திலும் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்ய விரும்பினால், அந்த மாதத்தில் 5 ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 5 ஆம் தேதியிலோ அவர் முதலீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். வருடத்திற்கு குறைந்தபட்ச முதலீடு ரூ.500 மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ.1,50,000 ஆகும். மேலும் மாதாந்திர பங்களிப்பு மற்றும் தொகை மொத்தமாக டெபாசிட் செய்யப்பட்டால், பிபிஎஃப் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பற்றி புரிந்துகொள்வோம்.

மொத்தமாக டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி:

உதாரணத்திற்கு, குறிப்பிட்ட நிதியாண்டில் ஒருவர் ஒரே நேரத்தில் ரூ.1,50,000 ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்யும் பட்சத்தில் பிபிஎஃப் மீதான வட்டி நடப்பு நிதியாண்டில் ஆண்டுக்கு 7.1% ஆக இருக்கும். அதன்படி, 2020 - 2021 நிதியாண்டில் அந்த நபர் ரூ.10,650 வட்டி தொகையை பெறுவார். வட்டித் தொகை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி கணக்கிடப்படும், இதனால் ஆண்டின் இறுதியில், பிபிஎஃப் கணக்கில் பெறப்பட்ட இறுதி வட்டி ரூ.10,650 ஆக இருக்கும்.

மாத பங்களிப்பு தொகைக்கு வட்டி:

ஒருவர் மாதத்திற்கு ரூ.10,000 முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். அதன்படி பிபிஎஃப் மீதான வட்டி ஆண்டுக்கு 7.1% ஆக உள்ளது. ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குப் பிறகு பிபிஎஃப் கணக்கில் மாதந்தோறும் டெபாசிட் செய்தால் அந்த நபர் ரூ.5,176.50 வட்டி மற்றும் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன் ஒரு மாத வைப்பு செய்தால் ஆண்டுதோறும் ரூ.5,768.10 வட்டியை பெறுவார்.
Published by:Vinothini Aandisamy
First published: