Home /News /business /

உங்கள் பெற்றோருக்கான சிறந்த மூத்த குடிமக்கள் காப்பீடைப் பெறுவது எப்படி?

உங்கள் பெற்றோருக்கான சிறந்த மூத்த குடிமக்கள் காப்பீடைப் பெறுவது எப்படி?

சிறந்த மூத்த குடிமக்கள்

சிறந்த மூத்த குடிமக்கள்

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காப்பீடு என்றாலே மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, மருத்துவக் காப்பீட்டின் பிரீமியம் மிகவும் அதிகம்.

எந்த வயதினராக இருந்தாலும் காப்பீடு மிகவும் முக்கியம். குறிப்பாக, முதியவர்களுக்கு காப்பீட்டின் தேவை உள்ளது. எதிர்பாராத மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள காப்பீடு மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காப்பீடு என்றாலே மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, மருத்துவக் காப்பீட்டின் பிரீமியம் மிகவும் அதிகம். பிரீமியம் செலுத்தவே கணிசமான தொகையை செலவிட வேண்டி வரும். இதனால், தேவையிருந்தாலும் பலரால் தங்களின் பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடை பெற முடியவில்லை.

இருப்பினும், உங்கள் பெற்றோருக்கு, குறைந்த விலையில் சிறந்த பாலிசியைப் பெற ஒரு சில வழிகள் உள்ளன.

ஊழியர்களுக்கான க்ரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் : 

பல நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வாழ்நாள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. இதில், க்ரூப் இன்ஷூரன்ஸ் எனப்படும் ஊழியரின் குடும்பத்தினரை (கணவன்/மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்) திட்டத்தில் சேர்க்கலாம். அடிப்படை ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட்டாலும், நீங்கள் கூடுதலாக குறைந்த தொகையைச் சேர்த்து கூடுதல் கவரேஜைப் பெறலாம். ஊழியர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் எந்த காத்திருப்பு காலம், மெடிக்கல் அண்டர்-ரைட்டிங் எதுவும் இல்லை. பாலிசி காலம் ஆக்டிவேட் செய்த உடனேயே பலன் பெறலாம்.

ஊழியர்-அல்லாத ஹெல்த் / மெடிக்கல் இன்ஷூரன்ஸ் : 

நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படாமல், நுகர்வோர் தளங்களில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீடுகளை உங்கள் பெற்றோருக்கு வாங்கிப் பயனடையலாம். உதாரணம், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது வங்கி வழங்கும் காப்பீடு, ஹெல்த்-கேர் சந்தா, குறிப்பிட்ட கிளப்ஸ் வழியே கிடைக்கும் இன்ஷூரன்ஸ் போன்றவை இந்த வகையில் அடங்கும். இதன் மூலம் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு குறைந்த செலவில் மருத்துவக்காப்பீடைப் பெறலாம். உதாரணமாக, 60+ வயதுள்ள தம்பதிகளுக்கு, 3 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு, தோராயமாக 30,000 வரை ஆகலாம்.

ALSO READ | PM-Kisan Scheme : 11வது தவணை நிதியை பெற மார்ச் 31-க்குள் விவசாயிகள் இதை செய்ய வேண்டும்..!

இன்ஷூரன்ஸ் பாலிசியில் டாப்-அப் திட்டங்கள்

அடுத்ததாக, நீங்கள் டாப்-அப் திட்டங்களைப் பெறலாம். கவரேஜின் அளவு தாண்டி, குறிப்பிட்ட தொகை வரை நீங்கள் டாப்-அப் திட்டங்களைப் பெறலாம். அறுவை சிகிச்சை அல்லது தீவிரமான நோய்க்கான சிகிச்சைக்கு இந்த டாப்-அப் பாலிசி மூலம் பயன் பெறலாம்.

மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பாலிசி

ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்காகவே சில பிரத்யேக பாலிசிகளை வழங்குகிறது. இதற்கு உதாரணம், பஜாஜ் அலையன்ஸ் சில்வர் ஹெல்த் பிளான். ஏற்கனவே உள்ள நோய்களுக்கான கவரேஜிற்கு இந்த பாலிசியில் பலன் பெற குறைந்தபட்ச டிரெஷ்ஹோல்ட் காலம் மட்டுமே என்பது இதில் முக்கியமான அம்சம். மற்ற பாலிசிகளில் உள்ள கடுமையான விதிமுறைகள் மூத்த குடிமக்களுக்கு இல்லை. ஏற்கனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் பாலிசியின் தொகையில் 50% வரை உடனடியாக கிடைக்கும் அம்சங்களும் உள்ளன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Citizen, Insurance, Life Insurance

அடுத்த செய்தி