புதிய வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் பலவற்றை டிஜிட்டல் பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில், பேடிஎம் தளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம் என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள், சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ஏற்கனவே பேடிஎம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாரத் கேஸ் நிறுவனத்தின் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு பேடிஎம் ஆப்-பில் மட்டுமே உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே உள்ள பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச சிலிண்டர் வெல்வதற்கான வாய்ப்பை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. இதை பெறுவதற்கு சிலிண்டர் முன்பதிவின் போது, கட்டணம் செலுத்துவதற்கு முன்பாக FREEGAS (ப்ரீ கேஸ்) என்ற கூப்பன் கோட்-ஐ நீங்கள் நிரப்ப வேண்டும். இதுமட்டுமல்லாமல், புதிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதலாவது முன்பதிவு பரிவர்த்தனையை செய்யும்போது, ரூ.30 அளவுக்கு பிளாட் கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு செய்யும்போது FIRSTCYLINDER (பர்ஸ்ட் சிலிண்டர்) என்ற புரோமோ கோட்-ஐ நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
Also read: 20 ஆண்டுகளாக மண்டையில் சிக்கியிருந்த புல்லட் - மருத்துவர்கள் வியப்பு..
இன்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி நிறுவனங்களைச் சேர்ந்த சிலிண்டர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். இது மட்டுமல்லாமல் அடுத்த மாதத்தில் இருந்து நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது நௌ பே லேட்டர் என்ற சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது போஸ்ட்பெய்டு முறையில் கட்டணம் செலுத்துவது போன்றது. இதற்கிடையே, வாடிக்கையாளர்கள் பேடிஎம் மூலமாக முன்பதிவு செய்யும்போது சிலிண்டர் டெலிவரி குறித்து ட்ராக் செய்வதற்கும், மீண்டும் புதிய சிலிண்டர் வாங்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நினைவூட்டுவது குறித்தும் மெசேஜ் அனுப்பும் வசதியை பேடிஎம் ஏற்படுத்தியுள்ளது.
PAYTM ஆப்-இல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?
* உங்கள் போனில் பேடிஎம் ஆப் உள்ளே செல்லவும்.
* ரீசார்ஜ் & பில் பேமென்ட் என்ற பிரிவில், புக் கேஸ் சிலிண்டர் என்பதை தேர்வு செய்யவும்.
* எந்த நிறுவனத்திடமிருந்து சிலிண்டர் பெற விரும்புகிறீர்கள் என்பதை அது கேட்கும். அதற்கான பதிலை நிரப்பவும்.
* இதற்குப் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி அல்லது வாடிக்கையாளர் நம்பர் என ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்.
* இப்போது பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை தொடங்கும். பேடிஎம் வாலட், பேடிஎம் யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பணம் செலுத்தலாம். அதேசமயம், FREEGAS (ப்ரீ கேஸ்) என்ற கூப்பன் கோட் உள்ளீடு செய்ய மறந்து விடாதீர்கள்.
* இப்போது உங்கள் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு முன்பதிவு உறுதி செய்யப்பட்டுவிடும். அருகில் உள்ள உங்கள் ஏஜென்சியில் இருந்து உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி ஆகிவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.