இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.50% ஆக உயர்த்தியுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இன்று அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.
இன்றையை ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்வுக்குப் பிறகு , வங்கிகள் சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இந்த ரெப்போ ரேட் உயர்வு முடிவு ஒருவரின் மாதாந்திர EMI-யை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பதை ஒரு சாமானியர் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
கடன் EMIகள் அதிகரிக்கும்:
மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் மற்ற வங்கிகளுக்கு தரும் கடன்களுக்கான ரெப்போ வட்டி என்று சொல்வோம். அந்த வட்டி உயர்த்தப்பட்டால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரும் கடன்களின் வட்டி விகிதமும் மாறும்.
வங்கி வட்டி விகித உயர்வு புதிய கடன் வாங்குபவர்கள் மட்டும் இன்றி வங்கியில் பணம் வைத்திருப்பவர்களையும் நேரடியாக பாதிக்கும். ஏற்கனவே கடன் வாங்கி அதை செலுத்தி கொண்டு இருக்கும் மக்களுக்கு இது பொருந்தாது என்றாலும் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த புதிய வட்டி அதிகரிப்பு இருக்கும்.
இதனால் வங்கிகளில் தனி நபர் வாங்கும் வாகன கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன் என்று எல்லா விதமான கடன்களுக்கான வட்டி விகிதம் என்பது அதிகரிக்கும். வட்டி அதிகரிக்கும் என்றால் மாதம் நாம் காட்டும் கடன் தொகை அதிகரிக்குமா ? எப்படி சமாளிப்பது என்று நினைப்பீர்கள்.ஆனால் வங்கிகள் அதை வேறு விதமாக கையாள்கின்றனர்.
வட்டி அதிகரிக்கும் பட்சத்தில் மாத மாதம் அதிக தொகையை சாதாரண மக்களால் கட்ட முடியாது. வீட்டு பட்ஜெட்டில் பெரிய அடியை ஏற்படுத்தும் என்பதால் வழக்கமாக கட்டும் மாதாந்திர EMI தொகையை அதிகரிப்பதற்கு பதிலாக கடனின் காலத்தை வங்கிகள் அதிகரிக்கின்றன. 10 வருடம் செலுத்தும் கடன் என்றால் அதற்கு பதிலாக கூடுதலாக சில மாதங்கள் கடன் கட்ட வேண்டி வரும்.
இதனால் மாதாந்திர குடும்ப செலவும் பாதிக்காது. புதிதாக கடன் வாங்குபவர்கள் இதை கவனித்துக்கொள்ளுங்கள். பிப்ரவரி பாலிசி விகித உயர்வின் பலனை வங்கிகள் தங்கள் எஃப்டிகளில் எவ்வளவு செலுத்துகின்றன என்பது குறித்து இனி தான் தெரியவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.